சிவாஜி எப்போதும் அந்த லாட்ஜ்லதான் தங்குவார்!.. பின்னாடி பெரிய செண்டிமெண்ட் இருக்கு…

1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவாஜி கணேசன். வந்த முதல் படத்திலேயே தமிழக அளவில் வரவேற்பை பெற்றார் சிவாஜி கணேசன். அதனை தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்தன.
அழகான முகத்தை கொண்டு நல்ல உடல்வாகு கொண்டவர்கள்தான் கதாநாயகனாக இருக்க முடியும் என சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு கருத்து இருந்தது. ஆனால் சிவாஜி கணேசன் அப்படி இல்லாத காரணத்தால் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார்.

sivaji3
ஆனாலும் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் தனி உயரத்தை பிடித்தார் சிவாஜி. ஆரம்பக்காலக்கட்டங்களில் தங்கும் இடத்திற்கு கூட சிவாஜி கணேசன் கஷ்டப்பட்டுள்ளார். சிவாஜி எப்போது சேலத்திற்கு சென்றாலும் அங்கு ஒரு லாட்ஜில்தான் வாடிக்கையாக தங்குவாராம். அதற்கு பின்னால் ஒரு கதை உண்டு.
சேலத்தில் ஒருமுறை படப்பிடிப்புக்காக சிவாஜி சென்றுள்ளார். அங்கு மாடர்ன் தியேட்டர்ஸின் ஸ்டூடியோ ஒன்று இருந்தது.பொதுவாக அந்த ஸ்டூடியோவில் பெரிய நடிகர்கள் மட்டுமே தங்க முடியும். அப்போது சிவாஜி சின்ன நடிகர் என்பதால் அவருக்கு அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிவாஜிக்கு இது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

sivaji
இந்த நிலையில் அங்கிருந்த கோயம்புத்தூர் லாட்ஜ் என்னும் விடுதி அப்போதே சிவாஜி கணேசனை அறிந்திருந்தது. எனவே அவரை அளித்து தங்க இடமளித்தனர் அந்த நிறுவனத்தினர். அதனால்தான் சிவாஜி கணேசன் எப்போது சேலம் சென்றாலும் அந்த லாட்ஜில்தான் தங்குவாராம். இதனால் அப்போது சிவாஜிக்கு என்று தனி அறையே அவர்கள் ஒதுக்கி வைத்திருந்தனர்…
இதையும் படிங்க: நடிகையின் வீடியோ! போட்டு போட்டு பார்த்த சரத்குமார் – படப்பிடிப்பில் நடந்த கிளுகிளுப்பு