Categories: Entertainment News

தலையில காரக் குழம்பு கொட்டிடுச்சா!.. ஷிவானி நாராயணனின் புது லுக்கை பார்த்து.. பகீரான ஃபேன்ஸ்!..

பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் இல் புதிதாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை வர்ணிக்கும் ஷிவானியின் புது லுக்கை கலாய்க்கும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் வெளியான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். 16 வயதிலேயே சீரியலில் நடிக்க வந்தவர், 19 வயதில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக பங்கேற்றார்.

இதையும் படிங்க: கொடுத்து வச்ச சூர்யா!.. கவர்ச்சி கடலாக கலக்கும் கங்குவா ஹீரோயின்!.. ஜோதிகா தான் ரொம்ப பாவம்!..

ஷிவானிக்கு அப்போதே 20 லட்சம் பேர் ரசிகர்களாக இருந்தது அந்த சீசனில் டைட்டில் வென்ற ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட பலரையும் ஆரம்பத்தில் அச்சம் அடைய வைத்தது. மேலும் கடைசிவரை ஷிவானி நாராயணன் அந்த வீட்டில் கிராண்ட் ஃபினாலே வாரத்திற்கு முந்தைய வாரம் வரை தாக்குப்பிடித்து அசத்தினார்.

கமல்ஹாசனின் செல்லப்பிள்ளையாக மாறிய ஷிவானிக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் அவருடைய காவல் நிலையத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது.

இதையும் படிங்க: அவசரப்பட்டு இதுவும் உல்டாவா போச்சே!.. என்ன விட்ருங்கடா ப்ளீஸ்!.. கதறும் வெங்கட் பிரபு..

மேலும், ஆர் ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் மற்றும் வடிவேல் நடித்த நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் ஷிவானிக்கு வராத நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மீண்டும் போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ்களை போட்டு வருகின்றார்.

ஷிவானி நாராயணன் புதிதாக ஹேர் கலரிங் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் அவரது முடியை கிண்டல் செய்து ஏகப்பட்ட கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால் டைட் டீ சர்ட் அவர் வீட்டிலுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மூச்சு முட்டுற அளவுக்கு மூடேத்துறியேம்மா என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Published by
Saranya M