ஷிவானிக்கு ஒரு விசில் போடு!.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிளுகிளுப்பு காட்டுறாரே!..
ஆந்திராவை சேர்ந்த ஷிவானி தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. சென்னை வந்து செட்டிலாகி வாய்பு தேடியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத வாளிப்பான உடலமைப்பை கொண்ட நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி ஷிவாணியை அரவணைத்தது.
இரட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனால், கட்டழகை நச்சென காட்டி புகைப்படங்களும், இடுப்பை வளைத்து வளைத்து ஆடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்களும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது. வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் குவிந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த வீட்டில் பல நாட்கள் இருந்தும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க அவர் எதையுமே செய்யவில்லை. அதன்பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். ஆனால், கிளிக் ஆகவில்லை.
இப்போது சின்னத்திரை மற்றும் சினிமா என இரண்டிலுமே வாய்ப்பு இல்லாமல் பொழுதை கழித்து வருகிறார். அதேநேரம், அவ்வப்போது கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களையும், பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க போன அவர் ஸ்டேடியத்தில் இருந்தே போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.