ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ்நாட்டில்தான் திறமை காட்டுவேன் என இங்கு வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடனம், நடிப்பு ஆகியவற்றில் அதிக ஆர்வமுடையவர். நடிப்பு பெருசாக வராது என்பது தனிக்கதை. இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்பான புகைப்படங்களையும், நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

தினமும் மாலை 4 மணி ஆனால் ஷிவானியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும். இதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள். அதை புரிந்துகொண்டு மீச்சம் வைக்காமல் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வந்தார்.
இதையும் படிங்க: ஹார்ட்டு வீக்கு!.. இவ்ளோ அழக தாங்காது செல்லம்!.. கேப்ரியல்லாவின் லுக்கில் மயங்கிய ரசிகர்கள்…

விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சினிமாவில் நுழைய வேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால், அவர் எதிர்பார்த்த கதாநாயகி வேடம் அவருக்கு கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பல நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரசிகர்களை கொஞ்சம் கூட இவர் கவரவில்லை.

அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டி.எஸ்.பி. என சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும்படியான அழுத்தமான வேடங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, அதற்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில், ஷிவானி நாராயணின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
