Connect with us

Entertainment News

உனக்கு எப்பவுமே 18 தான் ஸ்ரேயா!.. 41 வயசுன்னு சொன்னா யாரு நம்புவா!.. கவர்ச்சி சும்மா தூக்குது!..

நடிகை ஸ்ரேயா 41 வயதிலும் இளம் பெண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி உடையில் சைஸ் ஜீரோ லுக்கில் அசத்தல் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எனக்கு 20 உனக்கு 18 படத்தில் பார்த்தது போலவே நடிகை ஸ்ரேயா இன்னும் சிக்கென இருக்கிறார் என ரசிகர்கள் கண் வைத்து வருகின்றனர்.

ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு அழகான ராதா எனும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் போலவே ஸ்ரேயா இல்லை என்றும் இன்னமும் அவரது அழகான எடையை பார்த்தால் திருமணமே ஆகாதவர் தான் என்று சொல்லத் தோன்றுகிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஷாலிடம் இருந்து எஸ்கேப்பான சுந்தர் சி!.. இப்படி வசமா சிவகார்த்திகேயனிடம் சிக்கிட்டாரே!..

திருமணத்துக்காக சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டிருந்த நடிகை ஸ்ரேயா டோலிவுட், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் 2001 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான எனக்கு 20 உனக்கு 18 படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருப்பார். இரண்டாவது ஹீரோயினாக அந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரேயா.

இதையும் படிங்க: சுயமா சிந்திக்கவே தெரியாதா லோகேஷ்?… பங்கமாய் கலாய்த்த பயில்வான்… அட இப்படி எல்லாமா பேசுவாரு?

திரிஷா தெலுங்கில் நடித்த வர்ஷம் படத்தின் தமிழ் ரீமேக்கான மழை படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தார். தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினிகாந்த் உடன் சிவாஜி, தோரணை, கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ஸ்ரேயா ஸ்ரேயா அதன் பின்னர் கோலிவுட் பக்கமே வரவில்லை என்பது வருத்தமான ஒன்று தான்.

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் நடித்த ஸ்ரேயா ஹிந்தியில் திருஷ்யம் 2, கன்னடத்தில் கப்சா, மீண்டும் ஹிந்தியில் மியூசிக் ஸ்கூல் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். இந்த ஆண்டு ஷோ டைம் எனும் டிவி தொடரில் நடித்துள்ளார்.  இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக ஸ்ரேயா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவருக்கு மேலும், பட வாய்ப்புகளை கொண்டு வந்து குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பண்டிகை நாளில் களமிறங்கும் டாப் 5 பேன் இண்டியா திரைப்படங்கள்!.. வெறித்தனமா வரும் வேட்டையன்!..

google news
Continue Reading

More in Entertainment News

To Top