திருமணம் ஆவதற்கு முன்பே குழந்தையை பெற்றெடுத்த கமல்ஹாசனின் மனைவி… என்னப்பா சொல்றீங்க?

Published on: March 12, 2023
Kamal Haasan
---Advertisement---

உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன், 1980களில் இளம் பெண்களின் கனவு கண்ணனாகவே திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் மிகவும் துணிகரமாக முத்த காட்சிகளை வைக்கத் தொடங்கியவர் கமல்ஹாசன்தான். அதாவது கமல்ஹாசன் என்றால் முதலில் அவரது நடிப்புத் திறமை பலருக்கும் ஞாபகம் வரும். அதற்கடுத்து பலருக்கும் ஞாபகம் வருவது அவரது முத்தக்க்காட்சிகள்தான்.

Kamal Haasan and Vani Ganapati
Kamal Haasan and Vani Ganapati

கமல்ஹாசன் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் பிரபல பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரு குடும்பங்களின் சம்மதத்தோடே அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் கமல்ஹாசனுக்கும் பிரபல பாலிவுட் நடிகையான சரிகாவுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள். இது வாணி கணபதிக்கு தெரியவர, கமல்ஹாசனை தடுக்கப் பார்த்திருக்கிறார். ஆனால் நிலைமை கைமீறிப்போக 1988 ஆம் ஆண்டு கமல்ஹாசனும், வாணி கணபதியும் விவாகரத்து செய்துகொண்டனர்.

Kamal Haasan and Sarika
Kamal Haasan and Sarika

எனினும் இதே ஆண்டில்தான் கமல்ஹாசன், சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் என இரு மகள்கள் பிறந்தனர் என்பதை பலரும் அறிவார்கள்.

ஆனால் இதில் பலருக்கும் தெரியாத ஒரு சங்கதி ஒன்று உண்டு. அதாவது கமல்ஹாசனுக்கும் சரிகாவுக்கும் திருமணம் ஆன ஆண்டு 1988 ஆம் ஆண்டு. ஆனால் ஸ்ருதிஹாசனோ 1986 ஆம் ஆண்டே பிறந்துவிட்டார். அதாவது கமல்ஹாசனும் சரிகாவும் லிவ் இன் உறவில் இருந்தபோதே ஸ்ருதிஹாசன் பிறந்திருக்கிறார்.

Shruthi Haasan
Shruthi Haasan

அந்த சமயத்தில் மீடியாவின் வருகை அவ்வளவாக இல்லை என்பதால் இந்த விஷயம் பேச்சுப்பொருளாக ஆகவில்லை. ஒரு வேளை இன்று நடந்திருந்தால் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாக ஆகியிருக்கும்.

எனினும் சரிகாவும் கமல்ஹாசனும் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின் கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்தார் கமல்ஹாசன். தற்போது கௌதமியும் கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காலையில் ஆரம்பித்து மதிய உணவு இடைவேளைக்குள் கம்போஸ் செய்து முடிக்கப்பட்ட செம ஹிட் பாடல்… ராஜாவின் மேஜிக்!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.