கமல், சரிகா விவாகரத்து… சிக்கி சின்னா பின்னமான சுருதிஹாசன்..! இப்படி எல்லாமா நடந்தது?!

by sankaran v |
shruthihassan
X

shruthihassan

Shruthihassan: கமல் மகள் சுருதிஹாசன் ஒரு பன்முகத்திறன் கொண்டவர். நடிகை என்பதையும் தாண்டி இசையிலும் தேர்ந்தவர். கமலின் உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இவர் தான் இசை அமைப்பாளர். சிறந்த பாடகி. பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் அறிமுகம் ஆனார்.

விஜயுடன் புலி படத்தில் நடித்தார். அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அவரால் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. பல திறமைகள் கொண்டு இருந்தாலும் அவருக்கான சரியான படம் இன்னும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினி குறித்து அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க. முதன் முறையாக ரஜினிகாந்த் படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பாவுக்கும், அவருக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு.

கூலி படத்துல நடிச்சதால தான் அவரைப் பற்றி எனக்குத் தெரிஞ்சுது. இது எனக்குக் கிடைச்ச பாக்கியம். அவரிடம் ரொம்ப நல்ல விஷயங்கள் இருக்கு. எளிமையான மனிதர். ரொம்ப ஷார்ப். ஆனா கனிவோடு பேசுவார். அப்பா பற்றி பல விஷயங்களை எங்கிட்ட செட்டில பேசினார் என்கிறார் சுருதிஹாசன்.

இப்போது அவரது கடந்த கால வாழ்க்கைப் பற்றியும் வாய் திறந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

என் வாழ்க்கை பற்றி உங்களுக்கு தெரியாது. நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்ததால் மிகவும் எளிமையாக எனக்கு அனைத்தும் கிடைக்கவில்லை. நான் சினிமாவில் நடிப்பதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்தவற்றைக் குறித்து பலருக்கும் தெரியாது. என் அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்தபின் என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அப்பாவை பிரிந்து அம்மாவுடன் நாங்கள் சென்ற பின் எங்கள் வாழ்க்கை நினைத்தது போன்று இல்லை என்கிறார் நடிகை சுருதிஹாசன்.

Next Story