More
Categories: Cinema News latest news

லோகேஷ் கனகராஜுடன் உருண்டு புரண்ட ஸ்ருதிஹாசன்!.. இப்போ 2வது காதலரை கழட்டி விட்டுட்டாரா?..

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தனது இரண்டாவது காதலரை பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. சாந்தனு ஹசாரிகா எனும் கார்ட்டூன் வரையும் கலைஞரை கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்தார்.

முதல் காதலரை எப்படி தனது தந்தையிடம் அறிமுகப்படுத்தினரோ அதே போல இரண்டாவது காதலரையும் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புகைப்படங்கள் வெளியாகின. கமல்ஹாசனையும் ஓவியமாக வரைந்து சாந்தனு ஹசாரிகா அவருக்கு பரிசு ஒன்றையும் வழங்கியிருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இளையராஜா போட்ட டியூனை தூக்கி எறிந்த இயக்குனர்.. சும்மா இருப்பாரா இசைஞானி?..

ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் தளபதி விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், விஷாலுடன் பூஜை, தனுஷ் உடன் 3, பிரபாஸ் உடன் சலார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் எனும் காதல் ஆல்பத்தை ஸ்ருதிஹாசன் வெளியிட்டிருந்தார். ராஜ்கமல் தயாரிப்பில் அந்த பாடல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இனிமேல் பாடலில் ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து படு நெருக்கமாக நடித்திருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை பார்த்தால் கண்டிப்பாக ஸ்ருதிஹாசன் காதலர் பிரேக்கப் செய்து விடுவார் என பலரும் கலாய்த்து கமெண்ட் போட்டு வந்தனர்.

இதையும் படிங்க: விஜய் ரீல் தங்கச்சி என்ன பாத்ரூம்ல இப்படி உட்கார்ந்துருக்காரு!.. உச்சுக் கொட்ட வைக்கும் மடோனா!..

இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்து இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்களா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக நடிகை ஸ்ருதிஹாசன் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை காதலித்து வந்தார். அவருடன் பல மாதங்கள் லிவ் – இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், அவரைப் பிரிந்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகாவையும் பிரிந்து விட்டார் என அதிர்ச்சி கிளப்புகின்றனர். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தர்ஷா குப்தா கையை புடிச்சி விஷால் எங்க தள்ளிட்டு போறாருன்னு பாருங்க!.. என்னலாம் பண்ண வேண்டியிருக்கு!

Published by
Saranya M

Recent Posts