அமைதிப்படை மாதிரி படத்துல நடிப்பீங்களா? சிபிராஜ் சொன்ன வேற லெவல் பதில்!

by sankaran v |   ( Updated:2025-04-18 05:44:35  )
sibiraj, amaithipadai
X

sibiraj, amaithipadai

சத்யராஜ் மகன் சிபிராஜின் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் டென் ஹவர்ஸ். இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இது ஒரு கிரைம் திரில்லர் மூவி. இது திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம் குறித்து படத்தின் கதாநாயகன் சிபிராஜ் என்ன சொல்றாருன்னு பாருங்க…

டென் ஹவர்ஸ் படத்தோட கதை அப்படிப்பட்டது. இந்தப் படத்து நாயகனுக்கு காதலி, மனைவி இருக்காரான்னு எனக்கும் தெரியாது. இயக்குனருக்கும் தெரியாது.

அமைதிப்படை படம் மாதிரி ஒரு கன்டன்ட் வந்தா பண்ணலாம். அமைதிப்படையை ரீமேக் பண்ண முடியாது. ஏன்னா அது ஒரு கல்ட் பிலிம். அதைத் தொட்டா நிறைய கம்பேரிசன் வரும். பொலிடிகல் த்ரில்லர்ஸ் வேணா பண்ணலாம். தப்பில்ல. நான் வந்து தளபதி விஜய் ஃபேன். கட்சில இருக்கேன்னு சொன்னா எப்படி? வாட் புரோ. இட்ஸ் வெரி ராங் புரோன்னு சொல்கிறார்.

இந்தப் பேட்டியில் டென் ஹவர்ஸ் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புவதாகவும் அதே வேளையில் இன்று வெளியாகும் விஜயின் சச்சின் படத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் சிபிராஜ். டென் ஹவர்ஸ் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத் தான் அடுத்தப் படத்திற்கான கதையையும் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

நீண்டநாள்களாக திரையுலகில் இருந்தும் இன்னும் ஒரு நிலையான இடத்தை சிபியால் பிடிக்க முடியவில்லை. இவ்வளவுக்கும் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளம் எல்லாம் சூப்பராகத் தான் உள்ளது. நடிப்பும் செமயாக உள்ளது. ஆனால் ஏன் இவ்ளோ லேட்டாகியும் பிக்கப் ஆகவில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது. இவர் தந்தைக்கு அப்படியே நேரெதிர். நல்லா சாமி கும்பிடுவாராம். அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள இந்த டென் ஹவர்ஸ் படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story