அந்த விஷயத்துல அப்பா வேற… நான் வேற…! சத்யராஜ் மகன் இப்படி 'பளார்'னு சொல்லிட்டாரே!

sathyaraj, sibiraj
சத்யராஜ் தமிழ்சினிமா உலகில் புரட்சித்தமிழன் என்ற அடைமொழியுடன் வலம் வருகிறார். ஆரம்பத்தில் வில்லனாக வந்து ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கே டஃப் கொடுத்தவர். அடுத்து மெல்ல மெல்ல ஹீரோவானார். அப்படியும் படம் அவருக்கு தூள் கிளப்பியது. அமைதிப்படையில் ஆன்டி ஹீரோவாக வந்து கலக்கினார். வில்லனும், ஹீரோவும் என பல புதிய பரிமணாங்களைத் தமிழ்சினிமாவில் கொடுத்து அனைத்து கதாநாயகர்களையும் நெகடிவ் ஷேடில் நடிக்க ஒரு ரோல் மாடலாக இருந்தார்.
என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீயே என்ற டயலாக் சாட்சாத் 100 சதவீதம் அவருக்குப் பொருந்தும். வயதானாலும் நடிப்பில் நான் புலி தான் என்ற வாறு பாகுபலியில் கட்டப்பாவாக வந்து கலக்கினார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிங்கம் போல குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தினார். தற்போது வரை கெத்து குறையாமல் நடித்து வருகிறார். அதே போல அவரது மகன் சிபிராஜ் அப்படியே அவருக்கு ஆப்போசிட்டாக இருக்கிறார்.
சத்யராஜ் மாதிரி அவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பதற்காகவே அவரைப் பாராட்டலாம். அந்தவகையில் வரும் வெள்ளிக்கிழமை அவர் நடித்த டென் ஹவர்ஸ் என்ற கிரைம் திரில்லர் படம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வந்துவிட்டது.

புதுக்கதைகளைத் தான் இளம் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஹீரோ அவர்களுக்கு ரெண்டாம்பட்சம்தான். அதனால் இந்த க்ரைம் திரில்லர் மேல் அவ்ளோ ஈர்ப்பு. 10 மணி நேரத்துக்குள் நடக்கும் கதை என்பதால் படம் சுவாரசியமாக இருக்கும் என்றெ தோன்றுகிறது. இந்த நிலையில் சிபிராஜ் தன் தந்தையுடன் தன்னை ஒப்பிட்டு ஒரு விஷயத்தைக் கூறியுள்ளார். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. என்னன்னு பாருங்க.
அப்பா வேற. நான் வேற. அப்பா கடவுள் நம்பிக்கை இல்லாதவர். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். என்னோட நிஜ வாழ்க்கையில அப்பாவுக்கும் எனக்கும் கடவுள் சார்ந்து கருத்து வேறுபாடு அதிகம் இருக்கு. என்னைப் பொருத்தவரைக்கும் ஜாதி தவிர்த்து பார்த்தா, நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு நான் நம்புறேன். நாம என்னதான் சில விஷயம் முயற்சி பண்ணாலும் நமக்கு மீறி ஒரு சக்தி இருக்கு என்கிறார் நடிகர் சிபிராஜ்.