ஆத்தாடி அம்புட்டு அழகு… இவ்வளவு சிம்பிளாவா? சித்தார்த்தை கரம் பிடித்த அதிதி ராவ்…
Aditi-Siddharth: கோலிவுட்டில் ஒரு பக்கம் விவாகரத்து செய்திகள் வரிசை கட்டி வரும் நிலையில் இன்னொரு சந்தோஷமான விஷயமாகி இருக்கிறது. சித்தார்த்தை கரம் பிடித்து இருக்கிறார் நடிகை அதிதி ராவ்.
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் நடித்து பிஸியாக அறியப்பட்டவர் நடிகர் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் முன்னா கேரக்டரின் மூலம் கோலிவுட்டில் ஹிட்டடித்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னத்தின் ஆயுதஎழுத்து படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: ஏன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை? அஜித்தே சொன்ன காரணம்
பின்னர் பெரிய கேப் எடுத்துக்கொண்டு இந்தி பக்கம் சென்றார். அங்கு சரியாக வரவேற்பு கிடைக்காத நிலையில் மீண்டும் ஜிகர்தண்டா படம் மூலம் தமிழுக்கு திரும்பினார். மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ச்சியாக அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
கடந்தாண்டு சித்தார்த் தயாரிப்பில் வெளியான சித்தா திரைப்படம் நல்ல வசூலை குவித்தது. கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான இந்தியன்2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே மேக்னா என்பவரை சித்தார்த் 2003ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்…
ஆனால் அத்தம்பதி 2007ம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டது. தொடர்ந்து முன்னணி நடிகைகளுடன் காதல் வதந்தியில் சிக்கினார் சித்தார்த். இந்நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவின் நிச்சயத்தார்த்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து திருமணம் குறித்து இருவரும் எதுவும் அறிவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நேரத்தில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் இன்று ரொம்பவே எளிமையான முறையில் நடந்து இருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் புடைச்சூழ ஆடம்பரமே இல்லாமல் இருவரும் சிம்பிள் லுக்கில் தருணங்களின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவர்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.