வெயிலுக்கு நல்லா ஜில்லுன்னு இருக்கு!. தூக்கலான கிளாமரில் ரசிக்க வைக்கும் சிம்பு பட நடிகை!..
Siddhi idnani: நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சித்தி இட்னானி. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரின் அம்மா சீரியலில் நடிகையாக இருந்தவர். ஊடகம் தொடர்பான படிப்பை படித்தார். நடிப்பில் ஆர்வம் வரவே நடிப்பு பயிற்சி பட்டறையில் சேர்ந்தார்.
ஒருகட்டத்தில் மாடலிங் துறைக்கு சென்றார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். இவர் முதலில் நடித்தது ஒரு குஜராத்தி படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு 3 படங்களில் நடித்தார். தமிழில் கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படம் மூலம் அறிமுகமானார்.
முதல் தமிழ் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், வெந்து தணிந்தது காடு படம் சரியாக ஓடவில்லை. எனவே, அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
இதுதான் சித்தி இட்னானி நடித்த கடைசி திரைப்படம். பல சர்ச்சைகளை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்திலும் சித்தி இட்னானி நடித்திருந்தார். நல்ல வாய்ப்புகாக காத்திருக்கும் அவர் குஜராத்தி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு என எந்த மொழி படங்கள் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறார்.
ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் கிளுகிளுப்பை காட்டி சித்தி வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாவதுண்டு. அந்த வகையில் அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.