சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர்… காரணம் சரிதாங்கோ!

by Akhilan |
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர்… காரணம் சரிதாங்கோ!
X

Sigappu Rojakkal: தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இருக்கும் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல்ஹாசன் இல்லையாம். அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த நடிகர் ஒருவருக்கு தான் அந்த வாய்ப்பு சென்றதாம். ஆனால் அவர் அதை மறுத்த சுவாரஸ்ய காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாரதிராஜா அப்போது இந்தியாவை உலுக்கிய கிரைம்களை மையமாக கொண்டு எழுதி இயக்கிய திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, பாக்கியராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் என இரண்டு கிராம பின்னணி கதையை முடித்திருந்தார் பாரதிராஜா.

இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..

அடுத்து, திரில்லர் படத்தினை இயக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு சிகப்பு ரோஜாக்கள் படத்தினை உருவாக்கினார். இப்படம் சைக்கோ கொலையை மையமாக வைத்ததால் ஹீரோ பாடல் பாடுவதும், ஆடுவதும் கூடாது என்றாராம் கமல்ஹாசன். ஆனால் ஹீரோவின் கனவில் ஒரு பாட்டை வைத்து விட்டார் பாரதிராஜா.

30 நாட்களில் இப்படம் முழுவதும் ஷூட் செய்து முடிக்கப்பட்டது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைப்பு செய்து இருந்தார். இப்படம் தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னர் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

ஆனால் இந்த படத்தின் வில்லன் மற்றும் ஹீரோவான திலீப் கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா முதலில் அணுகியது சிவகுமாரை தானாம். அவரிடம் கதையெல்லாம் சொல்லிவிட்ட பாரதிராஜாவிடம் அசராமல் முடியாது என மறுத்துவிட்டாராம் சிவகுமார்.

அந்த வருடம் தான் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வில்லன் வேடம் ஏற்று இருந்தேன். ஆனால் அது மக்களிடம் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதுவும் அப்படி ஆகிவிட்டால் தன்னுடைய கேரியர் காலியாகிவிடும் என பயந்து முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். அதன்பின்னரே, அப்படத்தில் கமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story