சிக்கந்தர் போட்ட வேட்டுல எஸ்கே. படம் என்னாகுமோ? பீதியைக் கிளப்பும் பிரபலம்

by sankaran v |   ( Updated:2025-04-02 01:38:17  )
sikkander sk
X

sikkander sk

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் மதராஸி. சமீபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சிக்கந்தர் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அப்படி இருக்க எஸ்கே. நடித்துள்ள இந்தப் படத்துக்கும் அந்தப் பாதிப்பு இருக்குமோ என்று கேள்வி எழுகிறது. இதற்கு பிரபல மூத்த பத்திரிகையாளர் சுபையர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

தீனா, ரமணா, ஏழாம் அறிவு, கஜினி, கத்தி, துப்பாக்கின்னு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். சமீபத்தில் இவர் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கினார். அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஒவ்வொரு காலகட்டம்தான் இதுபோன்ற இயக்குனர்களுக்கு வரும். துப்பாக்கி காலகட்டத்தில் முருகதாஸ் பீக்கில் இருந்தபோது லோகேஷ் கனகராஜ்னு ஒருவர் வருவரான்னு யாரும் நினைத்துக்கூட பார்க்கல.

ஒருமுறை இயக்குனர் மணிரத்னத்திடம் இந்தப் படம் ஓடுமான்னு கேட்டாங்களாம். அதுக்கு அவர், ஓடும்னு நினைச்சித்தான் படம் எடுக்குறோம். ஆனா எல்லா படமும் ஓடுறது கிடையாது. ஓடும்னு கன்ஃபார்மா தெரிஞ்சா நான் எடுக்குற எல்லா படமும் ஹிட்டுன்னு மணிரத்னம் சொன்னாராம்.

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு டைரக்டர் வருவாங்க. ட்ரெண்ட் செட்டரா இருப்பாங்க. ஏ.ஆர்.முருகதாஸ் ட்ரெண்ட்செட்டர் கிடையாது. நல்ல டைரக்டர். மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர் மாதிரி ட்ரெண்ட்செட்டர் கிடையாது. அதனாலதான் அவங்க எல்லாம் ரொம்ப நாள் ஃபீல்டுல இருந்தாங்க. பாரதிராஜா, ஸ்டூடியோவுக்குள்ள மட்டும் எடுத்த படத்தை வெளி உலகில் கொண்டு வந்து எடுத்தார். அதுமாதிரி லைட்டிங் இப்படித்தான் இருக்கணும் என்பதை உடைத்து புது ட்ரெண்டை உருவாக்கியவர் மணிரத்னம்.

ARMurugadossஅதே போல் புரட்சிகரமான கதைகளை சினிமாவில் புகுத்தியவர் பாலசந்தர். ஆனால் வெற்றிகரமான இயக்குனர்கள் ட்ரெண்ட் செட்டர் இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி. சல்மான்கானும், ஏ.ஆர்முருகதாஸ்சும் வேற வேற ஜெனரேஷன். அதான் சிக்கல் வருது. அதே மாதிரி அட்லியும், ஷாருக்கானும் சேர்ந்து இயக்குன ஜவான் படம் சூப்பர்ஹிட். ரெண்டு பேருல ஷாருக்கான் சீனியர் நடிகர். அட்லி அப்டேட்டான யங் டைரக்டர். அதனால சூப்பர்ஹிட் ஆகுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிக்கந்தர் படமே பெரிசாப் பேசப்படலை. அதேமாதிரி ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸின்னு ஒரு படம் பண்றாரு. அதனால இந்தப் படத்துக்கு வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு சுபையர் இப்படி பதில் சொல்கிறார். ஏற்கனவே மதராஸி படத்துக்கு டீசர் மாதிரி விட்டாங்க. கத்தி, துப்பாக்கி மாதிரிதான் இருக்கு.

இதை இந்தியன் 3 பார்க்குற மாதிரியே இருக்கோன்னு சந்தேகம் வந்தது. இப்ப சிக்கந்தரோட ரிசல்டைக் கேட்கும்போது ஐயய்யோங்கற மாதிரிதான் இருக்கு. முழுப்படம் பற்றியும் தெரியாது. இன்னும் அப்டேட்ஸ் ஆகலை. படம் ஓரளவுக்குப் போனபிறகு தான் அதைப் பற்றிப் பேச முடியும்னு சொல்லிவிட்டார் என்கிறார்.

Next Story