லண்டனுக்கு புறப்பட்ட சிம்பு.. எதுக்காக தெரியுமா? இந்த முறை பெரிய சம்பவம் இருக்கும் போல..!

by muthu |   ( Updated:2023-06-03 23:09:44  )
லண்டனுக்கு புறப்பட்ட சிம்பு.. எதுக்காக தெரியுமா? இந்த முறை பெரிய சம்பவம் இருக்கும் போல..!
X

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு சமீபத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவானது. இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிந்தார்.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கனிசமான வரவேற்பைப் பெற்றது.

சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தொடர்ந்து 3 வருடங்கள் கழித்து தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிப்பதற்கு பயிற்சி பெறுவதற்காக சிம்பு லண்டன் சென்றுள்ளார். வரலாற்று காலத்தில் இந்த படத்தின் கதை நடப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான பிரத்யேக பயிற்சிகளை எடுப்பதற்கு சிலம்பரசன் லண்டன் சென்றுள்ளார். அடுத்ததாக தாய்லாந்து நாட்டிற்கும் சிம்பு செல்ல உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story