80களில் தன்னுடைய கவர்ச்சியால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னுள் கட்டிப் போட்டிருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சாதாரண ஒரு டச்சப் கேர்ளாக இருந்து அதன் பின் நடிகையாக மாறி உச்சத்தை தொட்டவர். ஆரம்பத்தில் ஒரு நடிகைக்கு டச்சப் கேர்ளாகத்தான் இருந்தாராம் சில்க். விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க்கை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை வினுச்சக்கரவர்த்தியை மட்டுமே சேரும்.

ஒரு மாவு அரைக்கும் மில்லுக்கு மாவு அரைப்பதற்காக சில்க் வர எதிரே ஒரு மாடி விட்டில் இருந்த வினுச்சக்கரவர்த்தி மேலே இருந்து சில்க்கை பார்த்திருக்கிறார். அவர் எழுதிய ஒரு கதைக்கு நடிகையை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் லட்டு போல மாட்டியவர்தான் சில்க். உடனே சில்க்கை கோடம்பாக்கத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க :கூப்பிட்டு அசிங்கப்படுத்தினாங்க!.. ரஜினி பண்ணத மறக்கவே முடியாது!. ஃபீலிங்ஸ் காட்டும் வடிவுக்கரசி…
அதன் மூலம் முதன் முதலில் சில்க் நடித்த படம் தான் வண்டிச்சோலை என்ற திரைப்படம். வினுச்சக்கரவர்த்தி சில்க்கின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தாராம். அதுவும் அதை அவரே எடுக்கவேண்டும் என எண்ணினாராம். ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய்விட்டது.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த சில்க்கை ரசிகர்கள் உள்ளங்கையில் வச்சு அழகு பார்க்க ஆரம்பித்தனர். புகழின் உச்சிக்கே சென்றார். அடிப்படையில் மிகவும் இனிமையான குணத்தை கொண்டவர் சில்க். அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். குழந்தைத்தனமான பேச்சால் எல்லாரையும் ஈர்த்தவர்.
இப்படி ஒரு கட்டத்தில் தன் அங்கத்தைத்தான் அனைவரும் விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொண்ட சில்க் குடிக்க ஆரம்பித்தாராம். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டாராம். மிகுந்த மன உளைச்சலில் இருந்த போது தான் அவருக்கு ஆறுதலாக இருந்தவர் அவருடைய காதலர் டாக்டர் ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளும் இருந்திருக்கின்றனர்.

இருந்தாலும் சில்க்கின் மனவேதனைக்கு மருந்தாக இருந்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். ஆனால் ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணனின் மகனே சில்க்கை காதலிக்க ஆரம்பித்தாராம். இது சில்க்கிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ராதாகிருஷ்ணனை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருடைய மகனை தன் மகனாகவே பாவித்திருக்கிறார் சில்க்.
இதையும் படிங்க :என் தங்கச்சி ஸ்ரீதேவி செம பிராடு.. நான் 12 கல்யாணம் பண்ணி வெச்சேன்- பகீர் தகவலை சொன்ன வனிதா
சில பிரபலங்களிடமும் அது என்னுடைய மகன் என்றே தான் அறிமுகப்படுத்துவாராம். அப்படி ஒரு தாயாக இருக்க வேண்டியவளை தாராமாக நினைத்துவிட்டானே என்று எண்ணி எண்ணி மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிகமாக குடிக்க ஆரம்பித்தாராம் சில்க். அதன் காரணமாகவே தற்கொலையும் செய்து கொண்டார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
