Connect with us
silk

Cinema History

என்ன இருந்தாலும் இப்படி நடந்திருக்கக் கூடாது! சிவாஜியை காப்பாற்றப் போய் மாட்டிக் கொண்ட சில்க்!

Silk Smitha:தமிழ் சினிமாவில் 80களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க்ஸ்மிதா.
இவர் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை வாங்கும்
வினியோகஸ்தரர்களும் படத்தில் சில்க் பாடல் இருக்கிறதா என்று கேட்டுதான் வாங்குவார்கள்.

அந்தளவுக்கு சில்கை பார்க்க வரும் ரசிகர்கள்தான் ஏராளம். முன்னணி நடிகைகளுக்கே இல்லாத அந்த ஒரு மரியாதை இவருக்கு இருந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என
பிற மொழி படங்களிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்தார்.

இதையும் படிங்க: இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமி….

ஒரு சமயம் மோகன்லால் படத்திற்கு ஒரு பாடலுக்காக சில்கை கேரளாவிற்கு படப்பிடிப்பிற்காக அழைத்திருக்கிறார்கள். ஆனால் சில்க்கோ வேண்டுமென்றால் அவரை இங்கு வந்து படப்பிடிப்பை நடத்தச் சொல்லுங்கள் என்று சொன்னாராம்

அதற்கு காரணம் அகங்காரம் இல்லை. ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம் சில்க். அதன் காரணமாகவே அங்கு வந்து என்னால் நடிக்க முடியாது என சொல்லியிருக்கிறார். ஏன் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி கூட யார் அந்த சில்க் ? என்று கேட்கும் அளவுக்கு பிரபலமாகியிருக்கிறார்.

இதையும் படிங்க: சைலன்ட்டா சித்து வேலை காட்ட பார்த்த சித்தார்த்!.. சும்மா வசமா இப்படி சிக்கிட்டாரேப்பா!.. என்ன ஆச்சு?..

இந்த நிலையில் அவர் சிவாஜி இருந்த ஒரு மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு மரியாதை இல்லாமல் அமர்ந்திருந்தார் என்ற ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வைரலானது . ஆனால் உண்மையிலேயே அந்த நேரத்தில் சில்க் நேரடியாக படப்பிடிப்பில் இருந்து வந்தாராம். அப்போது சூட்டிங்கில் கொடுத்த கவர்ச்சி ஆடையுடனே விழாவிற்கு வந்திருக்கிறார்.

அதனால் எல்லாரும் எழுந்திருக்கும் போது அவரும் எழுந்து நின்றால் கவர்ச்சி உடையில் இருக்கும் சில்க்கைத் தான் பார்ப்பார்கள். அது சிவாஜிக்கு மரியாதை இல்லாமல் இருக்கும் என்ற ஒரு காரணத்தினால் தான் அவர் எழுந்திருக்காமல் கால் மேல் கால் போட்டு உட்கார்த்திருந்தாராம்.

இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..

பின்னர் இதை சிவாஜியிடமே கூறி மன்னிப்பும் கேட்டாராம் சில்க். சிவாஜியும் சினிமாவை பற்றி தனக்கும் தெரியும் என்பதை கூறியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top