இனிமே யாரும் கல்யாணத்தை பத்தி சிம்புக்கிட்ட கேட்காதீங்கப்பா… இப்படியா ஓபனா சொல்றது?

by Akhilan |
இனிமே யாரும் கல்யாணத்தை பத்தி சிம்புக்கிட்ட கேட்காதீங்கப்பா… இப்படியா ஓபனா சொல்றது?
X

Simbu: நடிகர் சிம்பு இன்னமும் தன் திருமணத்தினை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் இனிமே யாரும் கல்யாணத்தினை பத்தி கேட்டால் என்ன சொல்வேன் என அவர் பேசி இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் டி.ராஜேந்தர் மற்றும் உஷாவுக்கு மூத்த மகன் தான் சிலம்பரசன். 1983ம் ஆண்டு பிறந்த சிம்புவுக்கு தற்போது 41 வயது ஆகிறது. இவரின் தம்பி குறளரசனுக்கே திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இன்னமும் சிம்பு திருமணம் செய்யாமலே வலம் வருகிறார்.

இதையும் படிங்க: கடவுளுக்கு நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த்..! வைரலான வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்

முதலில் நயன்தாராவை சிம்பு காதலிப்பதாக தகவல்கள் கசிந்தது. ஒருகட்டத்தில் இருவரும் லிப்லாக் அடித்துக்கொண்ட புகைப்படமே வெளியாகி அந்த காதலுக்கு ப்ரேக் கொடுத்துவிட்டது. அதில் இருவருமே உடைந்துவிட கொஞ்ச நாள் வெளியுலகில் தலைக்காட்டாமலே இருந்து வந்தார் நடிகர் சிம்பு.

இதை தொடர்ந்து நடிகை ஹன்சிகாவை லவ்வினார். சரி இப்போவாது இருவருக்கும் கல்யாணம் நடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த லவ்வும் ப்ரேக்கப்பில் முடிந்தது. இப்படி சிம்புவின் இரண்டு காதலிகளும் தற்போது கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டனர். நடிகர் சிம்புவுக்கு எப்போ தான் திருமணம் நடக்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி…

எங்களை மட்டுமே ஏன் கல்யாணம் பண்ணிக்கலைனு கேட்குறீங்க? நம்ம நேரம் வரும் போது தானே போக முடியும். அதுப்போல எங்களுக்கும் நேரம் வரும் போது தான் கல்யாணம் பண்ணிக்க முடியும் என்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக அதை கோலிவுட்டின் இன்னொரு லாங் டைம் பேச்சுலர் ப்ரேம்ஜி ஷேர் செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story