நடிகைக்கு அந்த மாதிரி மெசேஜ் அனுப்பிய சிம்பு… இதுக்கு நயன் தான் ஐடியாவாம்.. அடப்பாவிங்களா..!
Nayanthara Simbu: தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வேண்டிய நயனும், சிம்புவும் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். ஆனால் இருவரும் படப்பிடிப்பில் செய்யும் சேட்டைக்கு அளவே இருக்காதாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் நயன் இப்போது ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆளாக மாறினாலும் அவரின் ஆரம்பகால அட்டூழியங்கள் நிறைய இருந்ததாம். ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்தினை தொடர்ந்து அவருக்கு உடனே ரஜினியுடன் சந்திரமுகி வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: ரஜினியின் மனதுக்குள் சினிமா ஆசையை விதைத்த தோழி!.. இதுவரை வெளிவராத தகவல்!..
அடுத்தடுத்து தொடர் வாய்ப்புகள் வர கோலிவுட்டில் பிஸியானார். அப்போ சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு இருவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி காதல் மலர்ந்தது. ஒரு பக்கம் அதுவென்றால் நயனுடன் சேர்ந்து சிம்புவின் நிறையசேட்டை செய்தாராம்.
அப்படி ஒருமுறை பி.எல்.தேனப்பனின் மொபைலை எடுத்து சிம்புவும், நயனும் நடிகை கோபிகாவுக்கு ஐ லவ் யூ என மெசேஜ் செய்து இருக்கின்றனர். ஆனால் இது தேனப்பனுக்கு தெரியவில்லை. காலையில் அவருக்கு கோபிகாவிடம் இருந்து கால் வர என்னவென்று விசாரிக்க அவர் கோபத்தில் என்ன சார் இப்படிலாம் மெசேஜ் செய்ரீங்க எனக் கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: உள்ளே போனதும் நிக்ஷனை பார்த்து கேட்ட ஒரே ஒரு கேள்வி! பொங்கி எழுந்த அர்ச்சனாவின் அப்பா