இந்த நடிகைக்கு பாங்காங்ல என்ன வேலை?.. ஏற்கெனவே சிம்பு இருக்கும் போது?.. ஒருவேளை?..
யார் என்ன பண்றாங்க, எங்க போறாங்க என்று விழித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் ஒரு நடிகை பாங்காங் போயிருக்கிறார். அதில் என்ன விஷயம் இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்.
ஏற்கெனவெ சிம்பு பாங்காங்கில் தான் மூன்று மாதமாக தங்கியிருக்கிறார். அவர் ஏற்கெனவே பத்து தல படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடித்து விட்டு மார்ஷல் ஆர்ட்ஸ் கலையினை கற்பதற்காக பாங்காங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.
அவர் பாங்காங் சென்று மூன்று மாதம் ஆன நிலையில் பத்து தல படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதாம். டப்பிங் மட்டும் தான் மீதம் இருக்கிறதாம். அதனால் அவரை டப்பிங் பேச சென்னை அழைக்க சிம்புவோ நீங்கள் வேண்டுமென்றால் பாங்காங் வந்து டப்பிங் வேலைகளை இங்கேயே முடித்து விடலாம் என்று கூறினாராம்.
இதற்கிடையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கழகத்தலைவன். அந்த படத்தில் நடித்த ஹீரோயின் நிதி அகர்வால். ஏற்கெனவே சிம்புவும் நிதி அகர்வாலும் காதலிப்பதாக சில வதந்திகள் பரவி வந்தன.
கழகத்தலைவனில் அவர் நடிப்பை பார்த்து படவாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த வாய்ப்புகளும் வராததால் ஓய்வு எடுப்பதற்காக நிதி அகர்வாலும் பாங்காங்கிற்கு சென்றிருக்கிறாராம். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அம்மணிக்கு அங்கு என்ன வேலையோ? என்று பேசி வருகின்றனர்.
சிம்புவும் நிதி அகர்வாலும் சேர்ந்து ஈஸ்வரன் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அந்தப் படத்தில் இருந்தே இருவருக்கும் ஏதோ கிசு கிசு இருப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்பொழுது அம்மணியும் பாங்காங் சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : வாய்ப்பில்லை ராசா!.. சிம்பு படத்திற்கு வந்த புதிய சோதனை!.. இதெல்லாமா ஒரு காரணம்?..