சிம்பு படத்தில் ஆள் மாறாட்டம்..! நடிகரை ஏமாற்றிய படக்குழு...!
தமிழ் சினிமாவில் ரீஎன்ரி கொடுத்து மாஸாக கெத்து காட்டிக் கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக பல படங்களை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி நடிப்பிற்கு ஒரு நீண்ட இடைவெளி கொடுத்தார்.
ஆரம்பகாலங்களில் மிகவும் காதல், ரொமான்ஸ் போன்ற படங்களை கொடுத்தவர் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக
ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட்டே எகிறி விட்டது. கைவசம் தொடர்ந்து பல படங்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் அவருடனான அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார். சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தில் மதன் கதாபாத்திரத்திற்கு சிம்பு இவரை தான் கமிட் செய்தாராம். இவரும் சரி என்று சொல்ல நீண்ட நாள்கள் ஆகியும் படக்குழு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லையாம்.
நானும் காத்துக் கொண்டே இருந்தேன். கூப்பிடவே இல்லை. கடைசில படம் தான் வெளிவந்தது. அதில் சிம்பு தான் நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இப்போ நினைக்கும் போது நல்ல கதாபாத்திரம் மிஸ் ஆயிட்டேனு வருத்தமாக இருக்கும் என கூல் சுரேஷ் கூலாக கூறினார்.