Cinema History
யாரு சாமி இவன்… வெள்ளைக்காரனையே மிரள வைத்து சிம்பு செய்த காரியம்!..
சிறு வயது முதலே தமிழில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்தர் மூலமாக அறிமுகமான சிம்பு தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர்கள்தான் சிம்புவின் படங்களுக்கு பெரும் அளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். சிறு வயது முதலே சிம்பு சினிமாவில் இருந்து வருவதால் நடிப்பை பொறுத்தவரை சிம்பு கொஞ்சம் சிறப்பாகவே நடிக்க கூடியவர்.
ஆனால் சரியான நேரத்திற்கு அவர் படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்பதே அவர் மீது இருக்கும் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் தற்சமயம் சிம்பு சினிமாவின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். படத்திற்காக சில கடினமான வேலைகளையும் கூட செய்ய தயாராகி விட்டார். தற்சமயம் அவர் நடித்து வெளியான மாநாடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.
அந்தப் படங்களுக்காக உடல் எடையை குறைத்தல், அதிகரித்தல் போன்ற விஷயங்களை சிம்பு செய்து வந்தார். பல படங்களில் சிம்பு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சிங்கிள் டேக்கில் நடித்த சிம்பு:
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது முதல் படமான போடா போடி திரைப்படத்தை சிம்புவை வைத்துதான் படமாக்கினார். அந்த படம் முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டது. படத்தில் சிம்புவின் குழந்தை இறந்த பிறகு செண்டிமெண்டாக ஒரு காட்சி வரும்.
அந்த காட்சி குறித்து சிம்பு கவனமாக கேட்டுவிட்டு வேகமாக சென்று ஒரே டேக்கில் நடித்துள்ளார். அந்த படத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி அது. அந்த நேரத்தில் படத்தின் கேமிராமேனாக ஆங்கிலேயர் ஒருவர் பணிப்புரிந்து வந்தார்.
அவர் சிம்புவின் நடிப்பை பார்த்து வியந்துவிட்டார். யாருங்க இந்த பையன் இவ்வளவு சின்ன வயசுல இப்படி நடிக்கிறான் என ஆச்சர்யமாக பார்த்துள்ளார். அதே போல விண்ணை தாண்டி வருவாயா படத்திலும் ஒரு காட்சியில் சிம்பு சிறப்பாக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: விஜய்க்கு சொன்ன கதையில் ஹீரோவாக நடித்த சிம்பு… சச்சின் படத்துக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கா