STR: அதிக சம்பளம்!.. வேறபக்கம் ரூட்டை திருப்பி சிம்பு!.. அரசன் என்னாச்சி?…

சிம்புவின் புது பட அட்பேட்

arasan

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிலம்பரசன். மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்து வெளியான தக்லைப் திரைப்படம் சிம்புவுகு வெற்றிப் படமாக அமையவில்லை. அதன்பின் தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் இயக்கத்தில் படங்களில் நடிக்கும் முயற்சிகளை சிம்பு எடுத்தார்.

ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.. அதன்பின் வெற்றிமாறன் அழைக்கவும் அரசன் திரைப்படத்தின் நடிக்கப்போனார். ஆமா, இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை படம் முடிந்தபாடில்லை..

இந்த படம் முடிய இன்னும் சில மாதங்களாகும் என்கிற நிலையில் இடையில் மற்றொரு படத்தில் நடித்த சிம்பு திட்டமிட்டிருக்கிறார். அடுத்து டியூட் படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான், தற்போது அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்த படத்தை தயாரிக்கப் போவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இல்லையாம். மாறாக சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. உடனடியாக சிம்பு கால்சீட் கொடுத்ததால் சிம்புவுக்கு அவர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக கொடுக்க அந்த நிறுவனம் முன்வந்திருக்கிறதம்.

சிம்புக்கு மட்டுமில்லாமல் கீர்த்திஸ்வரனுக்கும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிக சம்பளத்தை கொடுத்து கமிட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →