கடவுள் சொல்ற விஷயங்கள தான் நான் சொல்றேன்.... அதிரடியாய் சொல்கிறார் சிம்பு
சிலம்பரசன் என்றாலே எதையும் வெளிப்படையாக சட்டென்று கூறிவிடுவார். அந்த வகையில் இது தப்பு, ரைட்டுன்னு எல்லாம் பார்க்க மாட்டார். மனதில் பட்டதை நச்சென்று சொல்லி விடுவார். அந்த வகையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் பெண் ரசிகைகளே அதிகம். அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு இப்படி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
ஏஏஏ படத்தைப் பொறுத்தவரை நிறைய சர்ச்சைகள் எழுந்தது. அந்தப்படத்தை நாங்க நினைச்ச மாதிரி எடுக்க முடியல. தயாரிப்பு தரப்பிலும் செலவாயிடுச்சுன்னு ப்ராப்ளம் ஆயிடுச்சு. அதனால இரண்டு பார்ட்டா எடுக்கலாம்னு யோசிச்சி சில விஷயங்கள் எடுக்க முடியல. அதனால தப்பா இருக்கலாம்.
நடிக்க வரலேன்னா கிரிக்கெட்ல போயிருப்பேன். நெருங்கிய தோழிகளாக திரிஷா, பிந்துமாதவி, தான்யா ன்னு நிறைய பேர் இன்னும் பேர் தெரியாதவங்கள்லாம் இருக்காங்க. எப்பவுமே பெண்களுக்கு எதிரா நான் நிறைய திட்டுறேன்னு சொல்வாங்க.
ஆக்சுவலா நான் அப்படி கிடையவே கிடையாது. ஐ ரெஸ்பக்ட் டு ஆல். என்னன்னா சினிமாவுக்காக லவ்வுங்கற விஷயத்துக்காக நிறைய திட்டுறதா தெரியும். பிடிச்சவங்களதான் நாம திட்ட முடியும். அவங்க தான் கோவிச்சுக்க மாட்டாங்க. அந்த மாதிரி தான் அது.
பீப் சாங் பொறுத்தவரை பெண் தோழிகள் யாருமே என்னைத் திட்டல. ஆக்சுவலா சப்போர்ட் பண்ணதே அவங்க தான். அதுக்கு அப்புறம் ரிலீசான இது நம்ம ஆளு படத்துக்கு அதிகமா பொண்ணுங்க தான் வந்து படம் பார்த்தாங்க.
உண்மை என்னன்னா சில பேரு சில விஷயங்கள தவறா கொண்டு போய் சேர்க்கும்போது யாரா இருந்தாலும் நமக்கு கோபம் தான் வரும். ஏன் பொண்ணுங்களப் பத்தி எப்பப் பாரு இவன் அப்படித் தான் பண்றான்னு பிடிச்சிருந்தா கூட அவங்களும் அப்படித்தான் யோசிப்பாங்க.
ஏன்னா எல்லோரும் சொல்றாங்க அப்படிங்கற போது அதை நாம தப்பா எடுத்துக்க முடியாது. நான் சொல்ல வர்றது என்னன்னா என்னோட இன்டன்சன் அது கிடையாது. நான் எழுதுனது தப்புன்னு நான் சொல்ல வரல. அப்படி எழுதுனது தப்புன்னா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.
ஆனா பொண்ணுங்கள இழிவு படுத்தணும்கறது என்னோட எண்ணம் கிடையாது. அதைத் தான் சொல்ல வர்றேன்.
அப்பா படத்துல தான் நான் அறிமுகமாகணும்கறது என்னோட மைன்ட் செட்டா இருந்தது. அதுக்கப்புறம் எனக்கு அவங்களே என்ன தூக்கி விடறதுங்கற மாதிரி இருக்கக்கூடாதுங்கறதுல நான் தெளிவா இருந்தேன். அதனால தான் அவரோட பேனர்லயோ, அவரோட படத்துலயோ நான் நடிக்கல.
நடிகர் விஜய் இப்போ நல்லா நடிச்சிக்கிட்டு இருக்காரு. சமுதாயத்து மேல நல்ல அக்கறை இருக்கு. பியூச்சர்ல அரசியல்ல வர்றதுக்கு வாய்ப்புகள் இருக்கு. எனக்கு எப்பவுமே ஒரு பிரதரா அவரோட பழகியிருக்கேன். அவர் எப்பவுமே நிறைய பேருக்கிட்ட நெருங்கிப்பழக மாட்டாரு. ஆனா நடிகர் சங்கம் எல்லாம் வரும்போது நான் மட்டும் தான் அவருக்கிட்ட போய் பேசுவேன்.
காவேரிக்காக குரல் கொடுத்த போது மக்கள் மத்தியில் இருந்து நிறைய ரெஸ்பான்ஸ் வந்தது. எப்பவுமே கலவரம், வன்முறை வருமோ என்ற பயத்தோட அங்க வேலை செய்ற தமிழர்கள் பயம் நீங்கி சுதந்திரமா வேலை செஞ்சாங்க. அவங்க இப்ப அந்த பய உணர்வு இல்லை. எல்லோரும் நட்பா பழகுறாங்கன்னு சொல்லும் போது எனக்கு நெகிழ்ச்சியா இருந்தது.
எட்டுவழிச்சாலையால மக்கள் பாதிக்கப்படறதுக்கான ஐடியா எல்லாம் எங்கிட்ட இப்போ இல்ல. எல்லோருக்குமே இருக்கறதுதான் எனக்கும் இருக்கு. சம்டைம்ஸ் டமால்னு எனக்குள்ள ஏதாவது தோணும். கடவுள் என்ன அதுக்காகவா வந்து எழுதிக்கொடுத்தா அனுப்பிச்சிருக்காரு. எப்பவாவது அவரு திடீர்னு சொல்ற விஷயங்கள தான் நான் சொல்றேன்.
செக்கச்சிவந்த வானம் மணிரத்னம் இயக்கிய படம். சமீபத்தில ரொம்ப சாப்டான படங்களாகத் தான் பண்றாரு. ரொம்ப ஹாட் கோரா இருக்காது. நாயகன், தளபதி படங்கள்லாம் ரொம்ப ஹாட் கோரா இருக்கு. சீட் நுனில இருந்து பார்க்கற மாதிரி இருக்கும்.
ரொம்ப எமோஷனலா அதாவது தகதகதகதகன்னு இருக்குற மோடுல இருக்கும். ஏன்னா அவ்ளோ ஆக்டர்ஸ். கதையே அந்த மாதிரி தான் இருக்கும். மணிரத்னம் பேனா வந்து நான் கதை கேட்கும் போது சார் இந்தப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார். இந்தப்படத்தை நான் ஸ்க்ரீன்ல பார்க்கணும்னு ஆசையா இருக்கு சார்னு சொன்னேன்.