More
Categories: Cinema News latest news

போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி! ஆத்மனை விட பயங்கரமான ஸ்டைலில் ரெடியாகும் சிம்பு – அசரவைக்கும் வீடியோ

Actor Simbu: தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48 வது படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இதுவரை அந்தப் படத்தை பற்றிய அப்டேட் எதுவும் வராத நிலையில் திடீரென ஒரு வீடியோவை பதிவிட்டு சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பத்துதல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் வெயிட்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சிம்பு அடுத்ததாக கமல் நிறுவனத்துடன் கை கோர்த்த நிலையில் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் எழுந்துவிட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கதையின் மீது நம்பிக்கை இல்லாமல் தயாரிப்பாளரே கொடுத்த தொல்லை… ஒரே படத்தால் ஓஹோ புகழ் கொடுத்த விக்ரமன்..!

இதனிடையில் ஐசரி கணேஷுடன் இருந்த பிரச்சினையில் இந்தப் படத்தை பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது.ஒரு வழியாக அந்த பிரச்சினையெல்லாம் முடிந்து மீண்டும் படத்திற்காக ரெடியாகிக் கொண்டிருக்கிறார் சிம்பு.

மலேசியாவில் இருந்து ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட சிம்பு அந்த வீடியோவில் அதிபயங்கரமான ஸ்டைலில் விதவிதமான கெட்டப்களில் கலக்கியிருக்கிறார். கூடவே ஃபிட்னஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதில் அடங்கியிருக்கின்றன.

இதையும் படிங்க: அரவிந்த்சாமியை ஏமாற்றிய தனுஷ்… எல்லாம் அவரு படம் ஓடுனதுனால வந்த மெதப்பு போல…

ஏற்கனவே ஆத்மன் என்ற பெயரில் எப்படி தன்னுடைய எடையை முழுவதுமாக குறைத்தார் சிம்பு என்பது அந்த வீடியோவில் பதிவாகியிருக்கும். கிட்டத்தட்ட அதே மாதிரியான வீடியோவாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அளவில் சிம்பு படு ஸ்டைலாக இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/Cy3EXjJNAtJ/?igshid=YTVqenI4dXIweXFh

Published by
Rohini

Recent Posts