அஜித் மீது கோபமாக இருக்கிறாரா சிம்பு... திடீரென விஜய் பக்கம் அடிக்கும் காத்து... ஓவர் பாசம் காட்டுவது ஏன்?

by Akhilan |
அஜித் மீது கோபமாக இருக்கிறாரா சிம்பு... திடீரென விஜய் பக்கம் அடிக்கும் காத்து... ஓவர் பாசம் காட்டுவது ஏன்?
X

vijay ajith simbu

சிம்பு தடாலடியாக விஜய் பக்கம் சாய்ந்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்புவிற்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் சிம்பு என்னவோ அஜித்தின் மீது தான் பெரிய ரசிகராக இருக்கிறார் எனக் கூறப்பட்டது.

vijay ajith

தன்னுடைய எல்லா படங்களிலுமே அதை வெளிப்படையாகவே சொல்லும்படியான காட்சிகளையும் வைத்திருப்பார். ஆனால் சமீபத்தில் வாரிசு படத்துக்காக சிம்பு பாடிய பாடல் பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. அவர் பாட்டு மட்டும் தான் பாடுவார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் முழு பாட்டிலுமே நடித்து கொடுத்தார்.

இதுகுறித்து விசாரிக்கும் போது சிம்புவிற்கு விஜய் நிறைய உதவிகளை செய்ததாகவும் அதனால் இந்த வாய்ப்பை சிம்பு பயன்படுத்தி கொண்டதாகவுமே கூறுகிறார்கள்.

vijay ajith

அதுமட்டுமல்லாமல் பேட்டி ஒன்றில் நீங்க தல ரசிகரா என்ற கேள்விக்கு எனக்கு தல அஜித்தின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே வெளிப்படையாக பேசுபவன். அதை விஜய் அண்ணா தப்பாகவே எடுத்து கொள்ளமாட்டார். அவரை எனக்கு நிஜ வாழ்க்கையில் பிடிக்கும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ் சினிமா ரசிகர்களின் எகிற செய்யும் பரபர துருதுரு நடிகை இவர்தாங்க!..

Next Story