சிம்பு மேல எந்த தப்பும் இல்ல!. எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்!.. இது தெரியாம போச்சே!..

simbu1
திரைத்துறையில் சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, கலை என எல்லாவற்றையும் ஒரு கை பார்த்தவர். தனது மகன் சிலம்பரசனை சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வைத்தார்.
சிம்பு சின்ன வயதில் நடித்த சில படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. சிம்புவை லிட்டில் சூப்பர்ஸ்டார் எனவும் பட்டமெல்லாம் டி.ஆர். கொடுத்தார். சிம்பு டீன் ஏஜை எட்டியவுடன் காதல் அழிவதில்லை என்கிற படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து சிம்பு ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராகவும் மாறினார்.
இதையும் படிங்க: தொடர் தோல்வி!.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுத்தே ஆகணும்!.. சொல்லி அடித்த விஜயகாந்த்…
ரஜினி - கமல், அஜித் - விஜய் ஆகிய இடத்திற்கு பின் சிம்பு எப்போதும் இருப்பார். நன்றாக நடிப்பார். துள்ளலாக நடனம் ஆடுவார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. ஆனால், படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார். பேசிய சம்பளத்தை விட திடீரென அதிகமாக கேட்பார். தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார் இப்படி சிம்பு மீது எப்போதும் பல புகார்களும் ஒருபக்கம் இருக்கிறது.
சிம்பு ஹீரோ என்றாலே சில தயாரிப்பாளர்கள் அலறுவார்கள். ஆனால், இதை எல்லாவற்றையும் மீறி சிம்பு அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: ஜெயிலர் டிரெய்லரில் இதெல்லாம் கவனிச்சீங்களா.. குறியீடுகளை வச்சே முழு கதையும் சொல்லிடலாம்!…
மாநாடு படத்திற்கு சிம்பு வாங்கிய சம்பளம் ரூ.8 கோடி மட்டுமே. ஆனால், மாநாடு ஹிட்டுக்கு பின் அவர் 25 முதல் 30 கோடி வரை சம்பளம் கேட்பதாக செய்திகளும் வெளியானது. அதேநேரம் மாநாடு படத்திற்கு பின் சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் தோல்வி அடைந்துவிட்டது. ஆனாலும் அவரின் சம்பளம் குறையவில்லை.
இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் செல்லூர் ராஜூ ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சிம்புவே என்னிடம் ஒரு முறை ‘நான் பணத்தாசை பிடித்தவன் என்பது போல எழுதுகிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை’ என சொன்னார். அவரின் சம்பளத்தை அவரின் அப்பா ராஜேந்தரும், அம்மா உஷாவும்தான் பேசுகிறார்கள். அவர்கள்தான் சம்பளத்தை அதிகமாக கேட்கிறார்கள்’ என அவர் அதில் சொல்லியிருந்தார்.