Cinema News
என் திரைப்பட வாழ்க்கையில் சிம்புதான் பெஸ்ட்!… அடடே அவரே பாராட்டிட்டாரே!….
சினிமாவில் ஒரு ரீஎன்ரி இவரது வாழ்க்கையையே புரட்டி போட்டது என்றே கூறலாம். ஆம் நடிகர் சிம்பு. இப்பொழுது தமிழ் சினிமாவே தேடும் அளவுக்கு ஒரு நல்ல உயரத்தை அடைந்து விட்டார் என்று தான் கூற வேண்டும். சில பல பிரச்சினைகளால் முடங்கி கிடந்த சிம்புவிற்கு மாநாடு படம் கைக் கொடுத்தது.
அந்த படத்தின் மாபெரும் வெற்றி இன்னும் பல வெற்றிக்கு வித்திட்டது. அடுத்ததாக இவரது வெந்து தணிந்தது காடு
படம் வருகிற 15 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார். வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
இதையும் படிங்கள் : தியேட்டரில் மின்சாரத்தை துண்டித்து சதி….படத்தை காப்பாற்றும் முயற்சியில் மீண்டாரா எம்.ஜி.ஆர்…?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ஜெயமோகன் சிம்புவை மனதார பாராட்டியுள்ளார். சொல்லப்போனால் இதுவரை நடிகர் சிம்புவை இப்படி யாரும் புகழ்ந்து பேசியதில்லை. ஜெயமோகனும் அவரது 18 வருட சினிமா கால வாழ்க்கையில் யாரையும் இப்படி சொன்னது இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
அவரது தோற்ற பயணம், உடல் பயணம் இதெல்லாம் என்னை புருவம் உயரச் செய்தது. இந்த படத்திற்காக அவரது நடிப்பையும் தாண்டி அவரது பயணம் அளப்பறியாதது. கௌதம் வாசுதேவ் மேனனை விட இந்த படத்திற்காக நான் நம்புவது நடிகர் சிம்புவை தான் என்று மிகப் பெருமையாக பேசியிருக்கிறார். ஒவ்வொரு சீன்களிலும் அவரது தோற்றம் வித்தியாசமாக இருக்கும் எனவும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும் கூறினார் ஜெயமோகன்.