சிம்பு படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா?? மாஸ் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் களமிறங்கும் ATMAN… வேற லெவல்…

Pathu Thala
சிம்பு நடிக்கும் “பத்து தல” திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை ஓப்லி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியானது.

Pathu Thala
“பத்து தல” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 48 ஆவது திரைப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு அறிவிப்பு வெளிவந்தது.

Kamal Haasan
அதாவது “STR 48” திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். தேசிங்கு பெரியசாமி இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Anthanan
அதாவது “STR 48” திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். இத்திரைப்படத்திற்காகவே தாய்லாந்த்தில் மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளச் சென்றாராம் சிம்பு. ஆதலால் இத்திரைப்படத்திற்காக தனது எடையை பல மடங்கு குறைத்திருக்கிறாராம்.

Manmathan
ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை அந்தணன் அப்பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது தனது 50 ஆவது திரைப்படமாக “மன்மதன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்பு உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறதாம். இத்திரைப்படத்தை சிம்புவே இயக்கவுள்ளார் எனவும் அந்தணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: AK 62 திரைப்படம் தாமதம் ஆவதற்கு இவ்வளவு காரணம் இருக்கா?… என்னப்பா சொல்றீங்க?