சிம்பு நடிக்க இருக்கும் கதை இந்த ஸ்டாருக்கு பண்ணியது தான்.. உண்மையை சொன்ன தேசிங்கு பெரியசாமி..!

Silambarasan: நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் கதை குறித்து அப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு ஆச்சரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் அப்போ க்தை செம மாஸா இருக்கும் போலவே என கமெண்ட் தட்டி வருகின்றனர்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தவர் தேசிங்கு பெரியசாமி. முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால் அப்படத்தினை தொடர்ந்து அவரின் இரண்டாம் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதையும் வாசிங்க:ஷாட் ரெடின்னதும் மனுஷன் இத கூடவா மறப்பாரு?.. ஐய்யய்யோ நம்பியாரோட மானம் போயிடுச்சே!.

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியில் இருந்து, எனக்கு ஒன்லைன் சொல்லிவிட்டு அப்புறம் கதையை ரெடி செய்யும் விஷயம் எல்லாம் இல்லை. முழுகதையை செஞ்சிவிட்டு அதுக்கேத்த நாயகரை தேடி விடலாம் என்ற ஐடியாவிலே இருந்தேன்.

அப்போ நான் செய்த இந்த கதையை சிம்புவிடம் சொன்னேன். அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. தன்னுடைய அடுத்த படம் இதுவாக தான் இருக்கும் என உறுதிக் கொடுத்தார். இந்த கதையை சிம்புவிடம் சொன்ன போது அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதால் வந்த மிகப்பெரிய இரண்டு படங்களுக்கு நோ சொல்லிவிட்டார்.

இதையும் வாசிங்க:அப்போ ரஜினியை சரியாக கவனிக்கல!.. இப்போ வருத்தப்படுறேன்!.. புலம்பும் இயக்குனர்…

இப்படத்தில் எதுவுமே லைவ் லோகேஷன் கிடையாது. எல்லாமே செட் போட்டு தான் எடுக்க இருக்கிறோம். படத்தில் இன்னும் இசையமைப்பாளர் யார் என்பது முடிவாகவே இல்லை. இரண்டு, மூன்று பேரிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம். முடிவான பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். இப்படத்தினை ராஜ்கமல் ப்லிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. கமல் சார் கதையை கேட்ட போது டெக்னிக்கல் விஷயமாக கேள்வி மட்டும் கேட்டார்.

இப்படத்தின் கதை முதலில் செய்தது ரஜினி சாருக்கு தான். ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு பதில் சிம்பு நடிக்கும் போது கதையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய தேவை ஏற்படவில்லை. ரஜினி சாருக்கு ஏற்ற கதையை சிம்புவால் பண்ண முடியும். டயலாக் டெலிவரியில் மட்டும் சில மாற்றம் செய்து இருக்கேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it