‘இது என்னடா மூஞ்சி?. இவன்லாம் ஒரு ஹீரோவா?’ தனுஷை கிண்டலடித்த சிம்பு!..
Actor Simbu: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் போன்றவர்களை எப்படி பார்க்கிறோமோ அதே கண்ணோட்டத்துடன் வலம் வருபவர்கள்தான் சிம்புவும் தனுஷும். குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே சிம்பு இந்த சினிமாவில் இருந்தாலும் தனுஷ் அவரையும் ஓவர்டேக் செய்து இப்போது எங்கேயோ போய்விட்டார். அந்தளவுக்கு உச்சத்தை அடைந்திருக்கிறார் தனுஷ்.
தனுஷ் இந்த சினிமா உலகிற்கு அறிமுகமான போது சிம்பு ஒரு ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். அதன் பிறகு தனுஷும் படிப்படியாக வளர இவர்களுக்குள் கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில் சிம்பு, தனுஷின் ஒரு பழைய பேட்டி இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
ஒரு படத்தின் பட விழாவில் சந்தித்துக் கொண்ட சிம்புவும் தனுஷும் ஒரே மேடையில் நின்றனர். அப்போது தனுஷை பார்த்து சிம்பு சில விஷயங்களை கூறுவது மாதிரி அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அதாவது துள்ளுவதோ இளமை பட சமயத்தில் தனுஷை பார்த்த சிம்பு ‘இதெல்லாம் ஒரு மூஞ்சா’என்று நினைத்தாராம். இதை தனுஷ் முன்னாடியே சிம்பு கூற தனுஷ் சிரித்துக் கொண்டே இருந்தார்.
அதன் பிறகு கண்டிப்பாக அந்தப் படம் தேறாது என சிம்பு நினைக்க துள்ளுவதோ இளமை படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதன் பிறகு காதல் கொண்டேன் படத்தை தனுஷுடன் இணைந்து சிம்பு முதல் நாள் ஷோவாக ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தாராம். அந்தப் படத்தை பார்த்து தனுஷிடம் ‘எங்கேயோ போகப் போறீங்க’ என சிம்பு கூறினாராம். அதுமட்டுமில்லாமல் ‘தமிழ் சினிமாவில் நாம் இருவரும் ஒரு பெரிய இடத்தை அடைய வேண்டும். நம்மைப் பற்றி இந்த சினிமா பெருமைப்பட வேண்டும்’ எனவும் சிம்பு கூறினாராம்.
இதையும் படிங்க: சும்மா இருந்தாலும் சொறிஞ்சு விடுறாங்களே!.. விஜய் ரசிகர்களை விடாமல் வம்பிழுக்கும் ரஜினி ஃபேன்ஸ்!..
மேலும் கூறிய சிம்பு ‘ நான் அன்பானவன். தனுஷ் தன்னடக்கமானவர். இவ்ளோ பெருமைகளை ஒரு மனுஷன் தலையில் ஏற்றி அமைதியாக இருக்கிறார். இல்லையென்றால் காணாமல் போயிருப்பார். அவர் காணாமல் போய்விட்டால் நானும் போயிருப்பேன்.ஒரு கட்டத்தில் என் படங்கள் வராமல் போனதற்கும் காரணம் தனுஷ்தான்.ஏனெனில் அவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருந்தார். நல்ல வேளை காப்பாத்திட்டாரு’ என அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.