சிம்பு செய்த வொர்க் அவுட்!. செம ஸ்டைலா மாறினது இப்படித்தான்.. அவரே வெளியிட்ட வீடியோ...

Actor simbu: அப்பா டி.ராஜேந்திரால் சினிமாவில் நுழைந்தவர் சிம்பு. சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சிறு வயதிலேயே பல ஹிட் படங்களை கொடுத்த சிம்பு காதல் அழிவதில்லை என்கிற படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.

நயன்தாரா, ஹன்சிகா என சொந்த வாழ்வில் சில காதல்களை செய்து பிரேக்கப் ஆனார். சிம்பு மீது எப்போதும் பல புகார்களும், சர்ச்சைகளும் உண்டு. படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். பாதி படத்தில் நடித்துவிட்டு சம்பளத்தை சேர்த்து கேட்பார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார் என திரையுலகில் சொல்வதுண்டு.

இதையும் படிங்க: நீ வா தல…! கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் இனி அதிரும்..! சூர்யா – சுதா கொங்காரா படத்தின் டைட்டில் இதான்..!

தயாரிப்பாளர் சங்கத்தில் இவர் மீது எப்போதும் ஒரு தயாரிப்பாளர் புகார் கொடுப்பார். அந்த அளவுக்கு எதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்துவிடுவதால் சிம்பு தொடர்ந்து நடித்து வருகிறார். திடீரென விண்ணை தாண்டி வருவாயா என்கிற ஹிட் படத்தில் நடித்தார்.

அதை வைத்து சில வருடங்கள் ஓட்டினார். ஆனால், உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். சிம்புவா இது என ரசிகர்கள் அதிர்ச்சியாகும் படி அவரின் தோற்றம் மாறியது. அதன்பின் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்குக்கு மாறி மாநாடு என்கிற ஹிட் படத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க: இந்த க்ளைமேக்ஸ் நல்லா இல்ல.. இயக்குனரை வெறுப்பேற்றிய தளபதி விஜய்..! சூப்பர் ஹிட் போச்சா..!

அதன்பின் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் ஓடவில்லை. ஒருபக்கம், மீண்டும் கொஞ்சம் வெயிட் போட்டார். எனவே, வெளிநாடு கிளம்பி சென்றுள்ள சிம்பு அங்கு மீண்டும் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்து உருவம் மாறிய வீடியோவை வெளியிட்டு அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/Cy3EXjJNAtJ/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story