இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்து வரும் நிலையில், ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், கடைசியில் அவர்கள் பங்கேற்கவில்லை.
சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் நேற்று நடைபெற்ற இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. சிம்பு மட்டுமே வழக்கம் போல தாமதமாக வந்து கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறகு எவன்டா!.. என்னையை போட்டு அடிக்காதீங்கடா!.. ஆடியோ லாஞ்சில் கதறிய அனிருத்!
நடிகர் சிம்பு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ரெட் கார்டு பிரச்சனை குறித்த கேள்விக்கு அதெல்லாம் உண்மை இல்லை. சில பிரச்சனைகள் உள்ளன அதை எல்லாம் பேசி சரி செய்து விட்டோம் எனக் கூறியுள்ளார். மேலும், ஓட்டு போட ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு சினிமா படப்பிடிப்பில் இருந்தேன். அதை தவிர்த்து விட்டு ஓட்டு போட வர முடியவில்லை. அப்படி வரும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என சிம்பு பொறுப்பற்ற பதிலை கூறியுள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், தனுஷ், ஹரிஷ் கல்யாண் வரை பெரிய நடிகர் முதல் இளம் நடிகர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிய நிலையில், சிம்புவின் அப்பா டி. ராஜேந்தர் உடம்பு முடியாத நிலையிலும் வந்து ஓட்டு போட்டுச் சென்றார். ஆனால், சிம்புவுக்கு ஓட்டுப் போடுவதை படப்பிடிப்பில் பங்கேற்பது தான் முக்கியமா? அன்று எந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: அவர பாக்குறதே பெருசு! என் பையன் செஞ்ச காரியத்தால் ஆடிப் போயிட்டேன்.. அஜித்தை பற்றி சூரி
மேலும், நிறைய உண்மையை பேசுவதால் தான் பல கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் தான் அதிகம் உண்மையில் பேசியுள்ளேன் என்றும் சிம்பு சொன்ன நிலையில், இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஹரிச்சந்திரன் வந்துட்டாருப்பா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…