சித்தர்களை பார்த்து முழுவதுமாக மாறிவிட்ட சிம்பு – சந்தானம் சொன்ன அதிர்ச்சி தகவல்!..

Published on: July 22, 2023
simbu santa
---Advertisement---

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ப்ளே பாயாக வலம் வந்த நடிகர் சிம்பு அடிக்கடி பல கிசுகிசுவில் சிக்கி சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்தார். ஆனால் சமீப காலமாக அவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடோடு இருக்கிறார் என்று நாம் கேள்வி பட்டுள்ளோம். உடல் எடை அதிகரித்து, பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாமல், சோகத்தில் இருந்த சிம்பு, யாருமே எதிர்பார்க்காத வகையில், உடல் எடையை குறைத்து கம் பேக் கொடுத்து அசத்தினார்.

str

இந்நிலையில் சிம்பு மொத்தமாக ஆன்மீகத்தில் மூழ்கிவிட்டார் என்று சந்தானம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை உள்ளவர் தான் சிம்பு, ஆனால் அவர் இவ்வளவு ஆழமாக ஆன்மீகத்தில் இறங்குவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 

இப்போது அவர் ஆன்மீகம், சிவன் ஆகியவை குறித்து பல புத்தகங்களை படித்து, யூடியூபில் பல வீடியோக்களை  பார்த்து முழுமையான ஆன்மீகவாதியாக மாறிவிட்டார். அவர் அடிக்கடி திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சித்தர்கள், சாமியார்களை பார்த்து வருகிறார் என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் சிம்புவை பார்த்தால் சினிமாவை பற்றி ஜாலியாக மணி கணக்காக பேசுவோம்.

santanam

இப்போதெல்லாம் பார்த்தால் ஆன்மீகத்தை பற்றி தான் மணி கணக்காக பேசுகிறோம். அவர் பலவற்றை படித்து தெரிந்துவைத்துக்கொண்டு எனக்கு விளக்குவார். அவர் இந்த அளவிற்கு ஆன்மீகத்தில் ஈடுபடுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அவர் ஒரு தனி ட்ராக்கில் பயணித்து கொண்டிருக்கிறார் என சந்தானம் தெரிவித்தார். விரைவில் சிம்பு திருமணம் செய்துகொள்வார் என செய்திகள் வெளியாகிவரும் சூழலில் சிம்பு ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார் என சந்தானம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க- ஏற்கெனவே வாங்கிய அடி பத்தாதா? மீண்டும் எமனுகிட்ட ஆசி வாங்க ஆசைப்படும் ஜிவி – இப்படி ஒரு முடிவா?

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.