பிரம்மாண்டமாக தயாராகிறது சிம்பு படத்தின் ஆடியோ லாஞ்ச் செட்...! இவர்கள் தலைமை என்றால் சொல்லவா வேண்டும்...

by Rohini |
simbu_main_cine
X

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் மாஸான நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிம்பு. சில பல காரணங்களாக ஏகப்பட்ட படங்கள் இவரின் கெரியரில் படு தோல்வியடைந்தன.

simbu2_cine

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு என்ற படத்தின் மூலம் ரீஎன்ரி ஆனார் சிம்பு. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒட்டுமொத்த சினிமாவும் சிம்புவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்த படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து படம் ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறது.

simbu3_cine

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலயே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் சிலபல பிரச்சினைகளால் இந்தாண்டு செப்டம்பர் 15 ல் திரைக்கு வரவிருக்கிறதாம். இதற்கு முன்னதால் செப்டம்பர் முதல் வாரத்தில் படத்திற்கான ஆடியோ லாஞ்சை நடத்த திட்டமிட்டுள்ளனராம் படக்குழு. இந்த படம் மும்பையை மையமாக வைத்து எடுக்க இருப்பதால் ஆடியோ லாஞ்ச் செட்டும் மும்பையின் சில இடங்களை நியாபகப்படுத்தும் படியான செட் அமைத்து அந்த செட்டிற்குள் தான் நடத்தப் போகிறார்களாம்.

simbu4_cine

ஆடியோ லாஞ்ச் தமிழ் சினிமாவின் பெரிய ஜாம்பவான்களான ரஜினி, கமல் முன்னிலையில் பல்லாவரம் ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

Next Story