ஏ.ஆர். ரஹ்மான் ரோல் சிம்பு பண்ணினா எப்படி இருக்கும்?.. இப்பவே போட்டியை ஆரம்பித்த எஸ்டிஆர் ரசிகர்கள்!
இளையராஜாவின் பயோபிக் படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. அந்த படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி விட்டது. மேலும், ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இளையராஜா படத்தையும் எடுக்கப் போகிறாராம்.
இளையராஜா பயோபிக்கின் அறிமுக போஸ்டருடன் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ், இளையராஜா, கமல்ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை கொண்டாடியது போல இருக்கு!.. கேரள ரசிகர்களுக்கு பெரிய ஐஸா வைத்த விஜய்!..
இளையராஜா பயோபிக்கை தான் ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யா பண்ணிட்டாரே என இசை படத்தின் போடர்களை வைரலாக்கி வந்த சிம்பு ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று ஏ.ஆர். ரஹ்மான் பயோபிக்கை போட்டிக்காக சிம்பு நடித்தால் நல்லா இருக்கும்ல என போட்டோக்களை எடிட் செய்து அட்டகாசமாக ஷேர் செய்து சண்டையை ஆரம்பித்துள்ளனர்.
இளையராஜா இப்போ இருக்குற லுக்குல தனுஷை பார்த்தால் சகிக்குமா? அருண் மாதேஸ்வரன் இயக்கிய ஒரு படமும் ஒழுங்கா ஓடல, எந்த நம்பிக்கையில இளையராஜா பயோபிக்கை தூக்கி இவருக்கிட்ட கொடுத்திருக்கிறார் தனுஷ்னு தெரியலையே என சிம்பு ரசிகர்கள் ஆரம்பமே அடித்து நொறுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதையும் படிங்க: வில்லனாக நடிக்கிற ஆளு… கருப்பா வேற இருக்கார்… ரஜினிகாந்துக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்…
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார். எஸ்டிஆர் 48 படத்திற்கு பிறகு சிம்பு யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால், தனுஷ் ராயன், குபேரா அடுத்து இளையாராஜா என அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.