Kamalhassan: கமல்ஹாசன் நடிப்பில் உருவான ஒரு முக்கிய படத்தில் நடிக்க சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் கிளாமர் காட்டவே பெரிய சம்பளத்தை கேட்ட சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ கெத்தாக நடித்தால் மட்டுமே சூப்பர்ஹிட் அடிக்கும் என்ற நிலையை மாற்றிய ஹீரோ கமல்ஹாசன் தான். அடி வாங்கி பைத்தியமாகி மனநலம் பிறண்டு என அவர் நடித்த படங்கள் ஏராளம். அப்படி முக்கிய படமாக இருப்பதுதான் தெனாலி.
படையப்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமாரை தனக்கு ஒரு படம் இயக்க அணுகி இருக்கிறார். அதே சமயத்தில் மருதநாயகம் வேறு தள்ளிப்போய் விட்டதால் தெனாலி மற்றும் ஹேராம் என இரண்டு படங்களில் நடித்தார்.
அது மட்டுமல்லாமல் கமலை வைத்து இந்த படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த படம் என்பதால் அவருக்கு உலக நாயகன் பட்டத்தையும் இதில் தான் கொடுத்தார். வாட் அபொவுட் பாப் என்ற படத்தினை தழுவலாக உருவான இப்படத்திற்கு வசனம் எழுதியவர் கிரேஸி மோகன்.

இப்படம் ஆரம்பிக்கும் போது ஹீரோயினாக சிம்ரன் மற்றும் மோகன்லாலிடம் பேசி இருக்கின்றனர். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் மோகன்லால் முடியாமல் போக ஜெயராம் அப்படத்தில் இணைந்தார். மேலும், கிளாமராக நடிக்க வேண்டும் என்பதால் பெரிய சம்பளம் கேட்டு இருக்கிறார்.
ஆனால் படக்குழு பட்ஜெட் பிரச்னையால் அவரை மறுத்து ஜோதிகாவை இப்படத்தில் ஒப்பந்தம் செய்தனர். கமல் படம் என்பதால் ஹீரோயின் இல்லை எனத் தெரிந்தும் தேவயானி நடிக்க ஒப்புக்கொண்டார். அதேப்போல ரவிக்குமாரின் சில படங்களால் மீனா நடிக்க முடியாமல் போக தெனாலி படத்தில் கேமியோ ரோலில் நடித்தார்.
அதேப்போல இப்படத்தில் மதன் பாப் ரோலில் முதலில் நடிக்க வந்தவர் விவேக். ஆனால் விவேக் காமெடி குறைவு என விலகிவிட்டார். அதுபோல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்ய பார்க்க அவரோ இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பிஸியாக இருந்தார்.
பின்னர் வாட்டர் என்ற படம் தள்ளிப்போக உடனே தெனாலி படத்தில் இணைந்தார். 2000 ஆண்டு தீபாவளி ரேஸில் வெளியான இப்படம் விஜயின் ப்ரியமானவளே, சீனு, வானவில் மற்றும் கண்ணுக்கு கண்ணாக என அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது.