படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்த சிம்ரன்!.. சிவாஜி இருக்கும் போது இப்படி பண்ணலாமா?.. என்ன நடந்தது தெரியுமா?..
தமிழ் சினிமாவில் 90களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவரது துள்ளலான இளமை அனைவரையும் சுண்டி இழுத்த காலகட்டம் அது. கிட்டத்தட்ட தன்னுடைய கவர்ச்சியால் அனைவரையும் தன் பக்கம் வசியப்படுத்தியவர் சிம்ரன். வெளிவந்த பெரும்பாலான படங்களில் சிம்ரன் தான் நாயகியாக இருந்தார்.
அந்த அளவுக்கு கவரப்பட்டார். இவருடைய தனி திறமையே அவரது நடனம் தான். தமிழ் சினிமாவில் நன்றாக ஆடக்கூடிய நடிகர் விஜய். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ஒரே நடிகை சிம்ரன் மட்டுமே. அது மட்டுமில்லாமல் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.
ஏராளமான படங்களில் விஜய்க்கு ஜோடியாகவே சிம்ரன் நடித்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு படம் தான் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம். 1997ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தை எச்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். படத்தில் சிவாஜி, விஜய், சிம்ரன், சரோஜா தேவி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
படம் சூப்பர் டூப்பர் வெற்றிப் பெற்றது. அந்த நேரங்களில் எப்படியாவது விஜயின் வளர்ச்சியை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே எஸ்.ஏ.சி இருந்து வந்தார்.அதனாலேயே விஜயகாந்த் வைத்து விஜயின் மார்கெட்டை உயர்த்தினார். இந்தப் படத்தில் சிவாஜியை நடிக்க வைத்து திரும்பி பார்க்க வைத்தார்.
எந்தப் படமாக இருக்கட்டும், எந்த நடிகராக இருக்கட்டும் எஸ்.ஏ.சியின் கேப்டன்ஷிப் மிக அற்புதமாகவே இருக்கும். 7 மணி சூட்டிங் என்றால் 6, 6.30 மணியளவில் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் எஸ்.ஏ.சி. கொஞ்சம் தாமதமானாலும் உடனே பேக்கப் என்று சொல்லிவிடுவாராம்.
ஏன் ஹிந்தியில் ராஜேஷ் கிருஷ்ணாவை வைத்து படம் எடுக்கும் போதும் அவர் தாமதமாக வந்ததால் பேக்கப் சொன்னவர் எஸ்.ஏ.சி.அதே நிலைமைதான் ஒன்ஸ்மோர் படத்தின் படப்பிடிப்பு சமயத்திலும். ஒன்ஸ்மோர் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் படமாக்கியபோது சிம்ரன் லேட்டாக வந்தாராம். எதுவும் சொல்லாமல் எஸ்.ஏ.சி பேக்கப் செய்து விட்டு போய்விட்டாராம். இந்த தகவலை விஜயின் பி.ஆர்.ஓ ஒரு பேட்டியின் போது கூறினார்.
இதையும் படிங்க : குருநாதரின் கோபத்திற்கு ஆளான இளையராஜா!.. சவால் விட்டு வெளியே வந்தவர் என்ன ஆனார் தெரியுமா?..