தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்.. மிஸ் பண்ண வருத்தத்தில் சிம்ரன்! இதுதான் காரணமா?

Published on: March 9, 2024
simran
---Advertisement---

Actress Simran: 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் இருந்த அந்த காலகட்டத்தில் வேறு எந்த நடிகையாலும் ஒரு உச்சத்தை பெற முடியவில்லை. அந்த அளவுக்கு சிம்ரனின் ஆதிக்கம் தான் சினிமாவில் இருந்து வந்தது. விஜய், அஜித், விஜயகாந்த், கமல், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த சிம்ரன் ரசிகர்களின் பெருவாரியான அன்பைப் பெற்ற நடிகையாகவே வலம் வந்தார்.

இவர் யாருக்கு ஜோடியாக நடித்தாலும் அந்த நடிகரின் ஆஸ்த்தான ஒரு ஜோடியாகவே சிம்ரன் பார்க்கப்பட்டார். பிரசாந்த் – சிம்ரன் ஜோடி, அஜித் – சிம்ரன் ,விஜய் – சிம்ரன் என இவர்கள் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இதையும் படிங்க: இதல்லவோ குடும்பம்… விஜயாக்கு பல்ப் மேல பல்பா கிடைக்குதே.. செம எண்டர்டெயின்மெண்ட் கியாரண்டி மக்கா!

சிம்ரன் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெறும் நடிகர்களுடன் டூயட் ஆடாமல் அந்தக் கதைக்கு தன்னுடைய கேரக்டர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பார்த்து சிம்ரன் எல்லா படங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

அதனாலயே மக்கள் மனதில் இன்றளவும் சிம்ரனுக்கு என தனி இடம் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் சிம்ரன் அளித்த ஒரு பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் தனக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது கிடைக்காமல் போனது என்பதை பற்றி சிம்ரன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜீத்!.. என்ன நடந்ததுன்னு தெரியுமா?..

துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் சிம்ரன் நடித்ததற்க்காக அவருக்கு அந்தப் படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசு விருது கிடைத்ததாம். அதேபோல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டியதாம்.

ஆனால் அந்தப் படத்தில் சிம்ரன் அவருடைய சொந்த குரலில் பேசாமல் டப்பிங் வைத்து பேசி இருக்கிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காக சிம்ரனுக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது கிடைக்காமல் போனதாம்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.