Cinema History
பிடிக்காம நடிச்ச படம்!.. ஆனா படம் பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத சிம்ரன்!..
Actor Simran: தமிழ் சினிமாவில் 90களில் டாப் ஹீரோயினாக இருந்தவர் நடிகை சிம்ரன். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கோலிவுட்டில் தடம் பதித்து ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறிப்போனார். கிட்ட்த்தட்ட 20வருட காலம் தன் நடிப்பாலும் நடனத்தாலும் இந்த சினிமாத் துறையை தன் கைவசம் வைத்திருந்தார் சிம்ரன்.
விஜய், அஜித், ரஜினி , கமல், சூர்யா, பிரசாந்த், விஜயகாந்த் என கோலிவுட்டில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த சிம்ரன் இடுப்பழகி என்ற பட்டத்துடன் வலம் வந்தார். அவருடைய சிறப்பம்சமே அந்த இடையழகுதான். அவர் நடித்த எல்லா படங்களிலும் அவர் ஆடும் போது தன் இடையை வளைத்து ஆடுவதை வழக்கமாக கொண்டார்.
இதையும் படிங்க: என்ன கண்ட்ராவி டிரெஸ்டா இது!.. கிளாமர் காட்டுறேன்னு ட்ரோலில் சிக்கிய ஸ்ருதி!..
அவர் நடித்த காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகையாகத்தான் சிம்ரன் இருந்தார். கால்ஷீட் கொடுக்க முடியாமல் பல முக்கிய ஹிட் படங்களை தவறவும் விட்டிருக்கிறார். இருந்தாலும் நடிகைகளிலேயே மிகவும் பலமான ரசிகர்களை கொண்ட நடிகையாக சிம்ரன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் சரண் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்ரனை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார். பார்த்தேன் ரசித்தேன் படம் பிரசாந்த் நடிப்பில் லைலா மற்றும் சிம்ரன் ஜோடியாக நடிக்க மிகவும் வெற்றிப்பட்ட படமாக வந்தது. ஆனால் அந்தப் படத்தில் முதலில் சிம்ரன் நடிக்க கால்ஷீட் கிடைக்காமல் சரண் அலைந்தாராம்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து மெகா படங்களில் பிசியான தனுஷ்… இயக்குனராகவும் பட்டையைக் கிளப்புவாரா?..
ஒரு சிங்கிள் டே கூட இல்லாமல் மிகவும் பிஸியாக நடித்து வந்த சிம்ரனிடம் கதையையாவது கேளுங்கள் என சரண் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை கேட்டதும் சிம்ரன் ‘இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன்’ என சொல்லி தன் மேனேஜரிடம் மற்ற படங்களின் கால்ஷீட்டை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
இந்தப் படத்திற்காக மொத்தம் 18 நாள்கள் கால்ஷீட் கேட்ட சரணிடம் ஒரு நாள், 3 மணி நேரம், 2 மணி நேரம் என ஒதுக்கியே சிம்ரன் இந்தப் படத்தில் நடித்தாராம். அந்தளவுக்கு பார்த்தேன் ரசித்தேன் படத்தின் கதை சிம்ரனை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அவர் எதிர்பார்த்ததை போலவே அவரின் கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படம் முடிந்ததும் படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுதிருக்கிறார் சிம்ரன். ‘என்னாச்சி?’ என இயக்குனர் கேட்டபோது ‘நான் மிகவும் குறைவாகத்தான் கால்ஷீட் கொடுத்தேன். அதை வைத்து இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்துவிட்டீர்கள்’ என சந்தோஷமாக சொன்னாராம்.
இதையும் படிங்க: சிம்புவுக்கும், எனக்கும் நடந்த சண்டை உண்மையா! 16 வருட ரகசியத்தை சொன்ன பப்லு!