சிம்ரன் செட் ஆகுமா?!. சந்தேகப்பட்ட விஜய்!.. ஆனா நடந்ததே வேற!.. ஹிட் படத்தில் நடந்த மேஜிக்!..

Published on: February 5, 2024
vijay simran
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் இப்போது அரசியலில் முழு நேரமாக தன் கவனத்தை திருப்புவதால் இனிமேல் படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக சமீபத்தில் ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார் விஜய்.

இதிலிருந்தே வி மிஸ் யூ விஜய், விஜய் அண்ணா என்றெல்லாம் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். கோலிவுட்டில் அதிக கலெக்‌ஷனை கொடுப்பதே விஜயின் படங்கள்தான். அதை இனிமேல் நாங்கள் மிஸ் பண்ணுவோம் என திருப்பூர் சுப்ரமணியமும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: முதன் முதலில் அதிக வசூலை கொடுத்த முதல் தமிழ் படம் எது தெரியுமா? அந்த காலத்திலேயே இவ்ளோ வசூலா?

அந்தளவுக்கு ஒரு பெரிய தாக்கத்தை சினிமாவில் ஏற்படுத்தியவர் விஜய். அதுவும் மிகப்பெரிய அளவில் பீக்கில் இருக்கும் போது அரசியலை நோக்கி அவரின் பயணம் என்பது ஒரு துணிச்சலான முடிவு என்றும் பல பிரபலங்கள் சொல்லி வருகின்றனர்.

simran
simran

இந்த நிலையில் விஜயின் பழைய படங்களின் அனுபவங்களை பற்றி இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் கூறினார். விஜய் மற்றும் சிம்ரன் ஆகியோரை வைத்து எழில் இயக்கிய படம்தான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. முதலில் வடிவேலு நடிக்க இருந்த படம் துள்ளாத மனமும் துள்ளும் என்றும் அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: வர வர கிளாமர் கூடிட்டே போகுது!.. வேறலெவல் லுக்கில் மயக்கும் லாஸ்லியா…

இந்தப் படத்திற்கு சிம்ரனை நடிக்க வைக்கலாம் என்று எழில் நினைத்திருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரி எழிலிடம் ‘யாருப்பா ஹீரோயின்?’ என கேட்க எழில் சிம்ரன் பெயரை சொல்லியிருக்கிறார். அதற்கு சௌத்ரி ‘சிம்ரனா? அந்த பொண்ணு க்ளாமரால எல்லா படத்திலயும் நடிச்சிருக்கு. இந்த கதையே வேற. சிம்ரன் சரியா வருமா? வேற ஹீரோயின வேணுனா போடலாமே’ என சொல்லியிருக்கிறார்.

ஆனால் எழில்தான் சிம்ரன் புடவை கட்டி நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என சொல்லி சிம்ரனை ஓகே செய்ய வைத்திருக்கிறார். கடைசியில் படத்தை பார்த்த விஜயும் சௌத்ரியும் ரொம்ப ஹேப்பியாகி விட்டார்களாம்.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு முதல் பாடல் எதுன்னு தெரியுமா? இதுவரை அவரே சொல்லாத ரகசியம்!..

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.