திரையுலகில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா என பல அவதாரங்கள் எடுத்தவர் சிங்கம் புலி. இயக்குனர் பாலாவுக்கு நெருக்கமானவர் இவர். பாலா இயக்கிய பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் இணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். நான் கடவுள் படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதன் பின் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மிளகாய், தூங்கா நகரம், முத்துக்கு முத்தாக, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களிலும் சிங்கம் புலி நடித்திருக்கிறார்.
தேசிங்கு ராஜா படத்தில் இவர் ஒரு திருமண பந்தியில் சாப்பிடும் காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அவர் ‘பாயாசம் எங்கடா’ என்று கேட்கும் அந்த காட்சி தொடர்பான புகைப்படத்தை இப்போதும் பலரும் மீம்சில் பயன்படுத்துகிறார்கள். அஜித் நடிப்பில் வெளியான ரெட் திரைப்படத்தை ராம் சத்யா என்கிற பெயரில் இயக்கியவர் இவர்தான்.
அதன் பின் சூர்யா, ஜோதிகாவை வைத்து மாயாவி என்கிற படத்தையும் சிங்கம் புலி இயக்கினார்.. அதன்பின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்திலும் நெகட்டிவ் வ்ஏடத்தில் நடித்து பலரின் கோபத்திற்கும் ஆளானார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள தாய் கிழவி படத்தின் ராதிகாவின் மகன்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிங்கம் புலி ‘தாய் கிழவி படத்தைப் பொறுத்தவரை நான் இயக்குரிடம் கதை கூட கேட்கவில்லை.. கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது.. சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்பது மட்டும்தான் தெரியும். நான் ஏன் கதையை கேட்கவில்லை என்றால் அஜித் சாரை வைத்து ரெட் படத்தை இயக்கியபோது கிட்டத்தட்ட 600 பேரிடம் கதை சொல்லியிருப்பேன். அங்க போய் சொல்லு.. இங்க போய் சொல்லு என்று கடைசியில் பூசாரி வரைக்கும் கதை சொன்னேன்.. படம் முடியு|றதுக்குள்ள எனக்கே கதையை மறந்து போயிடுச்சி.. அந்த நேரத்தில் நான் பட்ட பாடு இருக்கே… ஐயோ’ என ஜாலியாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…