சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் பிரச்சனையைக் கண்டுபிடிக்க அன்புவின் ஐடியா…திகைக்கும் மித்ரா

by sankaran v |
singappenne
X

singappenne

சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாக அடுத்து என்ன என்று யூகிக்க முடியாதபடி சென்று கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் பிரச்சனை என்னன்னு அன்பு கண்டுபிடித்தானா? வாங்க இன்றைய எபிசோடின் தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆனந்தி தன்னோட விஷயம் வெளியே தெரியக்கூடாதுன்னு எப்படி எல்லாமோ சமாளித்துக் கொண்டு இருக்கிறாள். அப்படித்தான் அவள் காதலன் அன்புவிடமும் சமாளிக்கிறாள். ஆனால் அவனோ ஒரு கட்டத்தில் ஆனந்தியை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என்று ஹாஸ்டலுக்கு வந்து செக்யூரிட்டியின் அனுமதியின்றி உள்ளே புகுந்து ஆனந்தியின் அறைக்கு வந்து விடுகிறான். ஆனந்தியோ பதற்றத்தின் உச்சத்திற்கே செல்கிறாள். எதற்காக எங்கிட்ட பொய் சொன்னேன்னு கேட்கிறான்.

தோழிகள் எப்படி எப்படியோ சமாளிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். ஆனந்தியும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள். ஆனால் அன்பு அதை நம்பத் தயாராக இல்லை. அதே நேரம் அன்பு ஆனந்திக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. எங்கிட்ட நீ மறைக்கிறன்னு மட்டும் கோபத்துல சொல்லி விடுகிறான். ஏன் எங்கிட்ட மறைக்கிறே? உனக்கு என்ன பிரச்சனை ஆனாலும் எங்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கறேன்னு எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான்.

அவளோ கொஞ்சம் கூட பிடி கொடுக்காமல் அக்கா மேரேஜ்இ அலைச்சல் அது இதுன்னு சப்பைக்கட்டு கட்டி சமாளிக்கிறாள். அதை உணர்ந்து கொண்ட அன்பு அங்கிருந்து செக்யூரிட்டியின் வற்புறுத்தலால் வெளியேறுகிறான். வீட்டில் வந்து அம்மாவிடம் ஆனந்தியின் பிரச்சனை பற்றி சொல்கிறான். ஆனந்திக்கு உன்னை விட்டா வேற யாரும் கிடையாது. உங்கிட்டேயே சொல்ல முடியாத பிரச்சனைன்னா அது எவ்வளவு பெரிய பிரச்சனைன்னு நீதான் புரிஞ்சிக்கணும். அவக்கிட்ட கொஞ்சம் பக்குவமா கோபப்படாம கேளுன்னு ஆறுதல் கூறுகிறாள்.

இதைக் கேட்ட அன்பு ஒரு ஐடியா பண்ணுகிறான். அதன்படி எந்த துணையும் இல்லாமல் தவிக்கும் சௌசௌவை (சௌந்தர்யா) ஹாஸ்டலுக்குப் போகச் சொல்லி ஆனந்தியின் அறையில் தங்க வைக்கிறான். அவளைத் தொடர்ந்து வரும் அன்பு ஆனந்தியிடம் நான் தான் சௌசௌவை தங்க வைத்தேன். நீ எங்கிட்ட இனிமே உன் பிரச்சனையை மறைச்சாலும் சௌசௌக்கிட்ட மறைக்க முடியாது. அவளை உன் பாதுகாப்புக்குத் தான் நான் உங்கூட தங்க வச்சிருக்கேன்னு சொல்லவும் ஆனந்தி திடுக்கிடுகிறாள்.

அவளது தோழிகளும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். கடைசியாக விடைபெறும்போது ஆனந்தி ஒரு நிமிஷம்னு அன்பு எதையோ சொல்ல வருகிறான். அப்போது எபிசோடு முடிகிறது. இதற்கிடையில் மித்ராவும் பழைய மாதிரி இல்லாமல் ஏதோ டென்ஷனுடனே இருக்கிறாள். இனி இதன் தொடர்ச்சியை நாளைய எபிசோடில் காணலாம்.

Next Story