சிங்கப்பெண்ணே: மகேஷை சந்திக்க விடாமல் செய்யும் மித்ரா! ஆனந்தியின் திட்டம் பலித்ததா?

mahesh aanandhi mithra
சிங்கப்பெண்ணே: ஆனந்தி எப்படியாவது மகேஷை சந்தித்து அந்த வீடியோவைக் கேட்டு வாங்கி விட வேண்டும் என்று நினைக்கிறாள். அதற்காக கம்பெனிக்குச் சென்றதும் மகேஷ் எத்தனை மணிக்கு கம்பெனிக்கு வருவார்னு செக்யூரிட்டியிடம் விசாரிக்கிறாள். அவரோ மகேஷ் முதலாளி. எப்ப வேணாலும் வரலாம். அவருக்கு உரிமை இருக்கு. அதை கரெக்டா சொல்ல முடியாதுன்னு சொல்லி விடுகிறார்.
அதன்பிறகு ஆனந்தி வந்தா கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்கிறாள். அதற்கு கருணாகரன் என்னை கம்பெனிக்குள்ள வர விடமாட்டார். நான் முடிஞ்சா சொல்றேன்னு செக்யூரிட்டி சொல்கிறார். ஆனந்திக்கு தையல் மிஷினில் தைக்கும் அளவைத் தராமல் போய்விடுகிறான் அன்பு. சௌந்தர்யாவும், ஆனந்தியும் மகேஷை சந்திப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இது முத்துவுக்கும், அவனது காதலிக்கும் புரியாத புதிராகவே உள்ளது. அன்புவிடம் முத்து போய் ஆனந்திக்கு அளவைக் கொடுன்னு சொல்ல அன்புவோ நீயே போய் சொல்லிக் கொடுன்னு சொல்கிறான். உடனே முத்து அன்புவை திட்டி எல்லாருக்கும் நீ தானே கொடுத்தே. இதையும் நீயே கொடுன்னு சொல்லி விடுகிறான். ஆனந்தியிடம் வந்து அன்பு அளவைக் கொடுக்கும்போது அன்பு வேணும்னுதான் எனக்கு அளவு தரலையான்னு ஏக்கத்துடன் கேட்கிறாள் ஆனந்தி.
இதற்கிடையில் மகேஷ், மித்ரா இருவரும் காரில் வர செக்யூரிட்டி கேட்டைத் திறந்து விடுகிறான். ஆனந்தி மகேஷ் வந்ததும் சொல்லச் சொன்னாளே என்று நினைவுக்கு வருகிறது. மித்ராவும் கூட இருப்பதால் அவனால் அது முடியாமல் போகிறது. அதனால் ரிசப்ஷனில் உள்ள பெண்ணிடம் விவரத்தை சொல்ல, மித்ரா பார்த்து செக்யூரிட்டியையும், அந்தப் பெண்ணையும் திட்டி விடுகிறாள். மகேஷைப் பார்த்து வீடியோ வாங்கத்தான் ஆனந்தி வந்திருக்கிறாள் என்பதை மித்ரா புரிந்து கொள்கிறாள்.
உடனே ஆனந்தியை மகேஷை சந்திக்க விடாதபடி செய்ய வேண்டும் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். அதே நேரம் கருணாகரன் ஆனந்தியிடம் முதலாளி எப்போ வருவாருன்னு நீ கேட்கக்கூடாது. முதலாளிதான் தொழிலாளி எப்போ வருவாங்கன்னு கேட்கணும்னு சொல்கிறான். ஆனந்தி எப்படியாவது மகேஷை சந்தித்து விட நினைத்து ஒரு வழியாக போகிறாள்.
ஆனால் இடையில் மித்ரா எங்கே போறன்னு கேட்கிறாள். தண்ணீர் குடிக்கன்னு ஆனந்தி சொல்கிறாள். அதுக்கு இப்படித்தான் போகணுமான்னு திருப்பி அனுப்பி விடுகிறாள். அடுத்து எப்படி மகேஷை சந்திக்கப் போகிறாள் ஆனந்தி என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.