சிங்கப்பெண்ணே: ஆனந்திக்குத் தெரிந்த அந்த விஷயம்… அன்புவின் அம்மா இப்படியா சொல்வாங்க?

anandhi, mahesh
சிங்கப்பெண்ணே தொடர் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஆனந்தியைச் சுற்றியே கதை நகர்வதால் தொடர் முழுவதும் ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது. ஆனந்தி தன்னைக் கெடுத்தவன் யார் என்பதை அறிய கம்பெனிக்குச் செல்கிறாள். அங்கு ஒவ்வொருவரையும் நோட்டம் இடுகிறாள். தன்னை யார் தண்ணீருக்குள் தலையைப் பிடித்து அமுக்கினான் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்கிறாள். அவனது கை மட்டும் தெரிகிறது. அதில் காப்பு கட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் அவன் யாராக இருக்கும் என்பதை அறிவதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறாள். மகேஷ் ஆனந்தியிடம் இப்ப உடம்பு எப்படி இருக்குன்னு நலம் விசாரிக்கிறான். அதே நேரம் தன்னோட மனதில் உள்ள ஆதங்கத்தையும் சொல்கிறான். ஆனால் நினைத்தது எல்லாம் நடக்கவில்லை என்றும் சொல்கிறான். அதைக் குழப்பத்தோடு கேட்டுக் கொண்டு இருக்கிறாள் ஆனந்தி.
இந்நிலையில் அன்புவின் அம்மாவுக்குக் காய்ச்சல். கஞ்சி காய்ச்சித் தரேன்னு கையில் வெந்நீரைக் கொட்டி அவதிப்படுகிறான் அன்பு. இதனால் அன்புவின் அம்மாவோ ஆனந்தியை வரச் சொன்னா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும். வரச் சொல்லு. இல்லன்னா போன் போட்டுக் கொடு. நான் பேசறேன்னு சொல்றாங்க.
அதுக்கு அவளுக்கு லீவு கிடைக்கல. அதனாலதான் அவளால வர முடியலன்னு அன்பு சொல்கிறான். அதற்கு மகேஷூக்குப் போன் போடு. நான் லீவு கொடுத்து ஆனந்தியை அனுப்பி வைக்கச் சொல்றேன்னு சொல்றாங்க. அதே போல சொல்லவும் மகேஷ் ஆனந்தியை அனுப்பி வைங்கன்னு கருணாகரனுக்குச் சொல்கிறான். கருணாகரன் வந்து சொல்ல ஆனந்தி இல்ல. நான் வேலை பார்க்குறேன்னு சொல்கிறாள்.

அதை கொச்சைப்படுத்தி பேசுகிறான் கருணாகரன். அதன்பிறகு மகேஷ் ஆனந்தியிடம் நடந்த உண்மையைச் சொல்கிறான். அப்போது அன்புவுக்கு வெந்நீர் கையில் கொட்டி வலியில் இருக்கிறான். அவங்க அம்மாவும் காய்ச்சலால் அவதிப்படுறாங்க. இந்த மாதிரி நேரத்தில் நீ போனா அவங்களுக்கு உதவியா இருக்கும்னு சொல்லவும், ஆனந்தி உடனடியாகப் புறப்படுகிறாள். அந்த வகையில் ஆனந்தி அவசரம் அவசரமாக புறப்பட்டு ஆட்டோவில் வருகிறாள்.
அங்கு வந்து பார்த்ததும் அன்புவின் அம்மா அன்புவிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். அன்பு விடம் உன் அத்தைப் பொண்ணு துளசி உன்னைக் கட்டிக்கணும்னு ரொம்ப ஆசையில இருந்தாள். நீ இல்லன்னதும் அவள் எவ்வளவு மன வேதனையில் போகிறாள் என்றும் சொல்கிறாள். அது பெரிய பாவம். அதனால் தான் நீ, நான், ஆனந்தி எல்லாம் இப்போ இவ்ளோ கஷ்டப்படுறோம்னு சொல்கிறாள்.
அதுமட்டும் அல்லாமல் நாம ஒரு நாள் உன் அத்தையையும் அவளையும் பார்த்து விட்டு வருவோம் என்றும் சொல்கிறாள். அதை ஆனந்தி ஜன்னலுக்கு வெளியே நின்று அதிர்ச்சியுடன் ஒட்டுக்கேட்டு விடுகிறாள். இனி நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.