சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பத்துக்குக் காரணம் யார்? டாக்டர் மகேஷிடம் சொன்னது என்ன?

Singappennea
சிங்கப்பெண்ணே சீரியல் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாள்களாக டாக்டர் திடீர் திடீர் என வாந்தி எடுத்து வருவதால் ஆனந்தியை டெஸ்ட் பண்ணுகிறார். அப்போது கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. தொடர்ந்து ஆனந்தி அதை நம்ப மறுத்து டாக்டரிடம் கோபப்படுகிறாள். அதனால் ஆனந்தி இன்னொரு டாக்டரிடம் பரிசோதனை செய்து பார்க்கலாம் என முடிவு செய்து அங்கு போகிறாள்.
அங்கும் இதே போல சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். அந்த நிலையில் பித்து பிடித்தவளைப் போல ஆஸ்பத்திரியை விட்டு பிரமை பிடித்த மாதிரி வெளியே வருகிறாள். ஒரே மழை. போகிற வழியில் சாக்கடை மூடி திறந்து கிடக்க பாதாள சாக்கடையில் விழுகிறாள். அப்போது காரில் வரும் மகேஷ் பார்த்து அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறான்.
அந்த மருத்துவமனையோ அவள் முதலில் டெஸ்ட் எடுக்க வந்தது. அதனால் அங்குள்ள ஒரு டாக்டருக்கு இது தெரிய வருகிறது. ஆனந்திக்கு சிகிச்சை கொடுக்கும் டாக்டரிடம் நடந்த விவரத்தை எடுத்துச் சொல்கிறாள். கர்ப்பத்திற்கு ஏற்ப அவளுக்கு சிகிச்சை செய்யப்படுகிறது. அப்போது பதற்றமாக மகேஷ் வெளியில் காத்திருக்கிறான். டாக்டரிடம் என்னாச்சு என கேட்கிறான்.
அப்போது டாக்டர் நீங்க யார்னு கேட்க கம்பெனி பாஸ்னு சொல்கிறான். அப்போதும் டாக்டர் உறவினர்களிடம்தான் சொல்ல முடியும் என்று சொல்லவும் நானும் அப்படித்தான். குடும்ப பெண் மாதிரி தான் என்று சொல்லவும் டாக்டர் மகேஷிடம் நடந்த விவரத்தை சொல்கிறாள். இதற்கிடையில் அன்பு ஆனந்தியைத் தேடி ஒவ்வொரு மருத்துவமனையாக அலைகிறான். கடைசியில் முத்துவுக்கு போன் பண்ணி ஆனந்தி பற்றி விசாரிக்கிறான். மகேஷிடம் டாக்டர் என்ன சொன்னார்? கர்ப்பத்துக்கு யார் காரணம்? இதற்கான விடையை அடுத்தடுத்த எபிசோடில் காணலாம்.