சிங்கப்பெண்ணே: பாவம் ஆனந்தி… அவளுக்கே நடந்தது தெரியாதாம்… காரணம் மகேஷா, அன்பா?

by sankaran v |   ( Updated:2025-04-01 11:01:26  )
anpu aananthi mahesh
X

#image_title

Singappennea: சிங்கப்பெண்ணே சீரியல் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்.

மருத்துவமனையில் டாக்டர் பாதாள சாக்கடையில் விழுந்த ஆனந்திக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மயக்கம் தெளிந்ததும் நடந்த விவரத்தைக் கூறி ஆனந்தியிடம் அவளது நிலைமைக்கு யார் காரணம் என கேட்கிறார். அதே நேரம் என்ன நடந்ததுன்னு கேட்ட மகேஷிடம் ஒழுங்கான சாப்பாடு இல்லை. ஓவர் வேலை. தூக்கம் இல்லை. ரொம்ப களைப்பு அது இதுன்னு சொல்லி டாக்டர் சமாளித்து விடுகிறார்.

அந்த வகையில் ஆனந்தியின் உடல்நலத்துக்கு இனி நான் கேரண்டி என மகேஷ் உத்தரவாதம் கொடுக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஆனந்தியின் மருந்துகள் அனைத்தையும் அவரே வாங்கிக் கொடுக்கிறார். இந்த நிலையில் அன்பு ஆனந்தியைத் தேடி அலைகிறான். கடைசியில் அம்மாவிடம் போய் நடந்ததைச் சொல்லி அழுகிறான். அதே நேரம் அன்புவின் அம்மாவும் என்னாச்சோ, ஏதாச்சோன்னு குழம்புகிறார்.

இந்த நிலையில் ஆனந்தியிடம் 'நீ நிதானமாக யோசித்துப் பார். உன் நிலைமைக்கு யார் காரணம்னு உனக்குத் தெரிய வரும்' என டாக்டர் ஆலோசனை கூறுகிறார். அது மட்டுமல்லாமல் 'இனி மாடிப்படி ஏறக்கூடாது. கஷ்டமான வேலை செய்யக்கூடாது. நல்ல சத்தான உணவு சாப்பிடணும்'. அப்படி இப்படின்னு நிறைய அட்வைஸ் கொடுக்கிறார். இதை எல்லாம் கேட்கும் மகேஷ் ரொம்பவும் சங்கடப்பட்டு நான் தான் ஆனந்தியின் இந்த நிலைமைக்குக் காரணம் என்கிறான்.

singappennea 'நான் தான் அவள் நேரத்துக்கு சாப்பிடுகிறாளா? ஹெல்தியான உணவுதானா? நல்ல தண்ணீரான்னு கவனிக்கல. அதே நேரம் அன்புவும் இப்படி செய்வான்னு நினைக்கல. அவன் ஒழுங்கா கவனிப்பான்னு நினைச்சேன்' என மனம் புழுங்குகிறான் மகேஷ். உடனே ஆனந்தியைத் தன் காரில் ஏற்றி ஹாஸ்டலில் விடச் செல்கிறான் மகேஷ். அதன்பிறகு அந்த மருத்துவமனைக்கு வரும் அன்பு பதறியடித்து டாக்டரைப் போய் பார்க்கிறான்.

'என்னாச்சு டாக்டர்? ஆனந்திக்கு என்னாச்சு?'ன்னு கேட்கிறான். உடனே 'ஆனந்தியின் உடல்நிலை பிரச்சனை இல்லை. மனநிலைதான் பாதிச்சிருக்கு. அதை சரிசெய்ய உங்களால் மட்டும்தான் முடியும்' என அன்புவிடம் டாக்டர் சொல்லி விடுகிறார். இனி நடப்பது என்ன என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.

Next Story