சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பத்துக்குக் காரணம் மகேஷா? அடக்கடவுளே... இது எப்போ நடந்துச்சு?

singapenne ananthi mahesh
Singappennea: ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது தான் இப்போது சிங்கப்பெண்ணே பார்க்கும் அனைத்தும் பார்வையாளர்களுக்கும் ஒரே கேள்வியாக இருக்கிறது. அன்புதான் ஆனந்தியைக் காதலிக்கிறான். ஆனந்தியின் கர்ப்பத்துக்குக் காரணம் மகேஷா? அடக்கடவுளே... இது எப்போ நடந்துச்சு?ஆனால் அது தெய்வீகக் காதல். மகேஷோ ஆனந்திக்கு அப்படி உதவுகிறான்.
ஆனால் அவனோ அவள் மேல் உயிரையே வைத்து இருக்கிறான். உயிருக்கு உயிராக ஒரு தலையாகக் காதலித்து அது தோல்வியில் முடிந்து விட்டது. அவனுக்கு ஆனந்தியும், அன்புவும் காதலிப்பது தெரிந்துவிட்டது. அதனால் ஒதுங்கி விடுகிறான். அதே நேரம் ஆனந்திக்கு ஒண்ணுன்னா துடிதுடித்துப் போய்விடுகிறான் மகேஷ். அவள் கர்ப்பம் என டாக்டர் சொன்னதும் தன்னிலை மறந்து ரோட்டில் நடந்து வருகிறாள்.
பாதாள சாக்கடையில் விழ மகேஷ்தான் காப்பாற்றுகிறான். அவள் உடல் அளவில் பலவீனமாக இருக்கிறாள் என டாக்டர் சொன்னதும் அவளை வார்டனை விட்டு நல்லா கவனிக்கச் சொல்கிறான். அன்புவையும் கண்டிக்கிறான். அவளை நல்லா கவனிக்க வேண்டும் என்று சொல்கிறான். அவளுக்காக கம்பெனியில் தரமான உணவு அனைத்துப் பணியாளர்களுக்கும் கிடைக்க ஒரு கேண்டீன் வைக்க வேண்டும் என அப்பாவிடம் சொல்கிறான் மகேஷ்.
அவர்களே அதிர்;;ச்சி அடைகின்றனர். ஆனந்தியின் டெஸ்ட் ரிப்போர்ட் மித்ரா கைக்குக் கிடைத்து அவள் அதிர்ச்சி அடைகிறாள். அதே நேரம் அதை ஆனந்தியிடமும் அவள் காட்டிக் கொள்ளவில்லை. முன்னதாக, ஹாஸ்டலில் போய் எப்படியாவது அன்பும், அவனது அம்மாவும் ஆனந்தியைப் பார்த்துவிட வேண்டும் என வருகிறார்கள். அங்கு அன்புவின் அம்மாவுக்கு மட்டும் ஆனந்தியைப் பார்க்க அனுமதி கிடைக்கிறது. ஆனந்தியை வந்து அன்பு அம்மா பார்க்கிறாள். அவளிடமும் ஆனந்தி எப்படியோ பேசி சமாளித்து அனுப்பி விடுகிறாள். ஆனால் அன்புவின் அம்மாவுக்கோ மருமகள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்ற எண்ணம் வந்து விடுகிறது. அதை அன்புவிடமே சொல்லியும் விடுகிறாள்.
இதற்கிடையில் மித்ரா ஆனந்தியின் கர்ப்பத்துக்கான காரணத்தை நினைத்துப் பார்க்கிறாள். அப்போது மகேஷூம், ஆனந்தியும் ஒரு படுக்கையில் இருப்பது காட்சியாகக் காட்டப்படுகிறது. அது எப்போ நடந்தது? ஆனந்தியின் கர்ப்பம் மகேஷ் உடனான நம் காதலுக்கு இடையூறாகி விடுமே என பயப்படுகிறாள் மித்ரா. அதற்காக அவள் ஒரு சதி தீட்டுகிறாள். கர்ப்பத்தைக் கலைப்பது குறித்து போலியாக போனில் ஆனந்தியின் காதுபட பேசுகிறாள். ஆனந்தி அதைக் கேட்டுத் திடுக்கிடுகிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.