சிங்கப்பெண்ணே: அந்த விவகாரத்தில் ஆனந்திக்கு சிக்கிய முக்கிய தடயம்… மகேஷிடம் இருந்து கிடைக்குமா?

singappennea
சிங்கப்பெண்ணே: ஆனந்தி தன்னோட இந்த நிலைக்கு யார் காரணம் கண்டு பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறாள். இதற்கிடையில் ஆனந்திக்கு என்ன பிரச்சனை என கேட்டு கேட்டு அவள் பதில் எதுவும் சொல்லாததால் குழம்பிப் போய் இருக்கிறான் அன்பு. சௌந்தர்யாவுக்கு ஆனந்தியின் விஷயம் தெரிந்து அதை அன்புவிடம் சொல்ல முற்படும் போதெல்லாம் ஆனந்தி தடுத்துக் கொண்டே இருக்கிறாள்.
ஆனால் ஒரு கட்டத்தில் சௌந்தர்யாவிடம் ஆனந்தி இந்த விஷயத்தை அன்புவிடம் சொன்னால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டி விடுகிறாள். இந்தப் பிரச்சனையைப் பற்றி பேசும்போது அன்பு வந்து விட 'ஆனந்தி தான் எத்தனை தடவை கேட்டாலும் பிரச்சனையைப் பற்றி பேச மாட்டேங்குறா. இனி அதைப் பற்றி நான் கேட்கப்போவதில்லை. என்கூட வாழ விருப்பம் இருந்தா அவளே சொல்லட்டும்'னு கோபித்து விட்டுச் செல்கிறான்.
சௌந்தர்யாவும், ஆனந்தியும் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆபீஸில் மகேஷூக்கு மித்ரா துபாயில் இருந்து கொண்டு வந்த ட்ரை ப்ரூட்ஸைக் கிப்டாகக் கொடுக்கிறாள். அது ஹெல்த்துக்கு நல்லது என்கிறாள். 'இந்த யோசனை நமக்கு ஏன் தோணாமப் போச்சு. ஆனந்திக்குக் கொடுத்திருக்கலாமே'ன்னு மகேஷ் நினைக்கிறான்.
உடனே அதைக் கொண்டு போய் ஆனந்தியிடம் கொடுக்கிறான். இதைப் பார்த்த மித்ரா கோபத்தில் நிற்கிறாள். கருணாகரன் மித்ராவிடம் இதென்ன நியாயம்னு கேட்டு எரியுற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறான். ஆனந்தியோ மகேஷ் கொடுத்த ட்ரை ப்ரூட்ஸை வாங்க மறுக்கிறாள். 'இதெல்லாம் எனக்கு சாப்பிட்டுப் பழக்கம் இல்ல சார்'னு சொல்ல, அன்புவை அழைத்து 'அவளுக்கு ஊட்டி விடு'ன்னு மகேஷ் சொல்கிறான். அதே போல் அன்பு ஊட்டி விட ஆனந்தி சாப்பிடுகிறாள்.
அதன்பிறகு அந்த கிப்டை அன்புவிடம் இருந்து வாங்கிக் கொள்கிறாள். இதற்கிடையில் அன்பு வீட்டில் இனிமே ஆனந்தியிடம் அந்தப் பிரச்சனையைப் பற்றி கேட்க மாட்டேன் என சொல்கிறான். ஆனந்திக்கு ஆதரவாக அம்மா பேசுகிறாள். தங்கையோ எதிராகப் பேசுகிறாள். அன்புவோ ஆனந்தி தான் அம்மாவுக்காக ஆஸ்பிட்டலில் இருந்து கவனித்தாள் என ஆனந்திக்கு ஆதரவாகப் பேசுகிறான். ஆஸ்டலில் ஆனந்தி மித்ரா, காயத்ரி, சௌந்தர்யாவிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள்.
இந்தப் பிரச்சனைக்கு இன்னும் முடிவு கிடைக்கலையேன்னு அனைவரும் கவலைப்படுகின்றனர். இதைக்கேட்டு ஆனந்தி, நீங்க எல்லாம் பிரச்சனை முடிந்தா போதும்னு நினைக்கிறீங்க. ஆனா நானோ இந்தப் பிரச்சனைக்குக் காரணமான அந்த ஆளு யாருன்னு கண்டுபிடிக்கணும்கறதுல தான் குறியா இருக்குறேன்னு சொல்கிறாள். அப்போ சௌந்தர்யாவிடம் மித்ரா கேட்கிறாள். உனக்கு அந்த பங்ஷன் நடந்த போது நினைவு இருக்கான்னு கேட்க, எனக்கு எந்த நினைவும் இல்லை.
ஆனந்தி தள்ளாடியபடி வந்தது மட்டும்தான் நினைவு இருக்கு என்கிறாள். கடைசியாக வீடியோ பற்றி பேசும்போது அது மகேஷிடம்தான் உள்ளது. அந்த வீடியோவில் ஆனந்தி குத்தாட்டம் போடுகிறாள். ஆனந்தியுடன் மகேஷூம் இருக்கிறான். இருவரும் அந்த வீடியோவை ஒரு முறை பார்த்த நினைவு ஆனந்திக்கும் வருகிறது. மறுநாளே கம்பெனிக்குப் போகிறாள். மகேஷ் சார் எப்போ வருவாங்கன்னு செக்யூரிட்டியிடம் கேட்கிறாள். அடுத்து நடப்பது என்னன்னு நாளைய எபிசோடில் பார்க்கலாம்.