சிங்கப்பெண்ணே: அம்மாவைக் கண்டதும் கதறி அழுத ஆனந்தி… இப்போதாவது உண்மையைச் சொல்வாளா?

singappennea today
கடந்த சில வாரங்களாகவே சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் வாந்தி, குமட்டல், கர்ப்பம்னு கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. அவளது இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பது அவளுக்கே தெரியவில்லை. அதுதான் தொடரை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது. இதைக் கேட்கும் டாக்டர்களே அவள்மீது பரிதாபப்படுகிறார்கள். அவளுக்கு நிறைய ஆலோசனையும் தருகிறார்கள்.
அன்பு உண்மையாகக் காதலிக்கிறான் என்றால் அவனிடமே உண்மையைச் சொல்லி புரிய வை. அப்புறம் உடனே கல்யாணம் செய்து கொள். இல்லாவிட்டால் இன்னும் ஒரு மாதத்தில் வயிறு காட்டிக் கொடுத்துவிடும். அதன்பிறகு மறைக்க முடியாதுன்னு சொல்கிறார் ஆனந்தியை முதலில் பரிசோதித்த டாக்டர்.
இதற்கிடையில் மித்ரா ஆனந்தியின் நிலை பற்றி அறிய வேறு யாரிடமோ பேசி அறிவுரை சொல்வது போல ஆனந்தி அருகில் இருந்து போனில் பேசுகிறாள். இதனால் ஆனந்திக்கு அதீத குழப்பமாகிறது. மித்ராவுக்கு ஒருவேளை தெரிஞ்சிருக்குமோ என்று பதற்றப்படுகிறாள். அவளிடமே கேட்க, மித்ராவோ என் தோழி ஒருவருக்கு இப்படி நடந்துள்ளது. அதனால்தான் அட்வைஸ் பண்ணினேன்.
அதைக் கேட்டு உனக்கே நடந்தமாதிரி ஃபீல் ஆகுறன்னு கேட்கிறாள் மித்ரா. தொடர்ந்து மகேஷ் மித்ராவிடம் ஆனந்தி இப்போது எப்படி இருக்கிறாள். அவளை நல்லா பார்த்துக்கோ. அவளுக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ லீவு கொடு. அதே மாதிரி அன்புவுக்கும் கொடு. அவன்தான் ஆனந்தியை நல்லா பார்த்துக்குவான்னு மகேஷ் சொல்றான். ஆனந்திக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது என்றும் ஃபீலாகிறான் மகேஷ்.
இதற்கிடையில் அன்பு ஆனந்தியின் அண்ணன், அண்ணியை சந்தித்து ஆனந்திக்கு இந்த ஹாஸ்டல், ஹாஸ்பிடல் எல்லாம் பிடிக்கல. கொஞ்சநாள் உங்க வீட்ல இருக்கட்டும். நானும் வந்து பார்த்துக்கறேன். அவள் உடல்நிலை சரியானதும் திரும்ப ஹாஸ்டலுக்குப் போகட்டும்னு கேட்கிறான். அதற்கு ஆனந்தியின் அண்ணனும், அண்ணியும் சம்மதிக்கிறார்கள். அண்ணனோ ஆனந்திக்காக நாட்டுக்கோழி வாங்க புறப்படுகிறான்.
இதற்கிடையில் ஆனந்தியின் அம்மாவும், அப்பாவும் ஹாஸ்டலுக்கு வருகிறார்கள். போன் போட்டும் எடுக்கல. அதான் வந்துவிட்டோம். ஆனந்தியைப் பார்க்க என்கிறார்கள். ஆனந்தி அவர்களைக் கண்டதும் திடுக்கிடுகிறாள். எப்படி நான் அவங்களைப் பார்ப்பேன்னு உடைந்து அழுகிறாள். அதே நேரம் ஆனந்தியின் தோழிகள் அவளை அழைத்து அம்மாவின் முன் நிறுத்த ஆனந்தி ஓடிவந்து அம்மாவைக் கட்டியணைத்துக் கதறுகிறாள். அடுத்து இப்பவாவது அம்மாவிடம் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற உண்மையைச் சொல்வாரா என்று நாளைய எபிசோடில் பார்க்கலாம்.